செய்யுளியல் - நூற்பா எண் 13 | 81 | | இணை எதுகையும் பொழிப்புஎதுகையும் ஒரூஉ எதுகையும் கூழை எதுகையும் மேற்கதுவாய் எதுகையும் கீழ்க்கதுவாய் எதுகையும் முற்று எதுகையும், இணைமுரணும் பொழிப்புமுரணும் ஒரூஉமுரணும் கூழைமுரணும் மேற்கதுவாய்முரணும் கீழ்க்கதுவாய்முரணும் முற்றுமுரணும், இணைஇயைபும் பொழிப்பு இயைபும் ஒரூஉ இயைபும் கூழை இயையும் மேற்கதுவாய்இயைபும் கீழ்க்கதுவாய் இயையும் முற்று இயையும், இணை அளபெடையும் பொழிப்புஅளபெடையும் ஒரூஉ அளபெடையும் கூழைஅளபெடையும் மேற்கதுவாய்அளபெடையும் கீழ்க்கதுவாய்அளபெடையும் முற்று அளபெடையும், ஆகிய இவற்றோடு பொருந்தும் முப்பத்தைந்தும் முற்கூறிய தொடையும் அத்தொடை விகற்பமும் ஆம் என்று கூறுவர் ஆசிரியர் எ-று. | | | (13) | விளக்கம் | நிறுத்தமுறை - முதல் நூற்பா. மோனை எதுகை முரண் இயைபு அளபெடை என்ற ஐந்தனையும் இணைபொழிப்பு ஒரூஉ கூழை மேற்கதுவாய் கீழ்க்கதுவாய் முற்று என்பனவற்றோடு உறழத் தொடை விகற்பகம் 35 ஆயினமை உணரப்படும். | ஒத்த நூற்பாக்கள் | | `மோனை எதுகை முரணே இயைபுஎன நால்நெறி மரபின தொடைவகை என்ப.' | | | - தொ. பொ. 400 | | | | `அளபெடை தலைப்பெய ஐந்தும்ஆகும்.' | | | - தொ. பொ. 401 | | |
|
|
|