| `தொடைஎனப் படுவது அடைவகை தெரியின் எழுத்தொடு சொற்பொருள் என்றிவை மூன்றின் நிரல்பட வந்த நெறிமைத் தாகி, அடியோடு அடியிடை யாப்புற நிற்கும் முடிவினது என்ப; முழுதுணர்ந் தோரே.ழு | | | - காக்கை | | |
| `அடுத்த அடியிரண்டு யாவகைப் பாவினும் தொடுத்து வழங்கலின் தொடையெனப்படுமே.ழு | | | - மயேச்சரம் | | |
| `எழுத்தியல் தொடைகளின் இடைக்கண் மாறுகோள் மொழிப்பொருள் தொடைமுறை பிறழ வைத்ததோர் இழுக்கியல் பிலாநிரல் நிறையும் எட்டென ஒழுக்கினர் உண்மையை உணர்தல்வேண்டும்.ழு `தொடையே அடியிரண்டு இயையத் தோன்றும்.ழு | | | - யா. வி. 33 | | |
| `மோனை எதுகை முரண் இயைபு அளபெடை பாத இணையே பொழிப்போடு ஒரூஉத்தொடை கூழை கதுவாய் மிசையதூஉம் கீழதூஉம் சீரிய முற்றொடு சிவணுமார் அவையே.ழு | | | - யா. வி. 34 | | |
| `மயங்கிய தொடைமுதல் வந்ததன் பெயரான் இயங்கினும் தளைவகை இன்னன ஆகும்.ழு | | | - அவிநயம் | | |
| பல்வகைத் தொடைஒரு பாவினில் தொடுப்பின், சொல்லிய முதல்தொடை சொல்லினர் கொளலே.ழு | | | - சிறுகாக்கை | | |
| `தொடையடி உட்பல வந்தால், எழுவாய் உடையத னாற்பெயர் ஒட்டப் படுமே.ழு | | | - காக்கை | | |
| `விகற்பங் கொள்ளாது ஓசையின் அமைதியும் முதற்கண் அடிவரின், முடிவ தாகும்.ழு | | | - பல்காயம் | | |
| `முதற்சீர்த் தோற்றம் அல்லது ஏனை விகற்பம் கொள்ளார் அடியிறந்து வரினே.ழு | | | - நத்தத்தம் | | |
| `தொடைபல தொடுப்பினும் தளைபல விரவினும் முதல்வந் ததனான் மொழிந்திசின் பெயரே.ழு | | | - யா. வி. 53 | | |
| 13 |
|
| |