84 | இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் | | மூன்றாம் சீர்க்கண்ணும் மோனை முதலாயின வரத்தொடுப்பின் பொழிப்புத் தொடையும், நடு இருசீர்க்கண்ணும் இன்றி முதல் சீர்க்கண்ணும் நான்காம் சீர்க்கண்ணும் மோனை முதலாயின வரத் தொடுப்பின் ஒரூஉத் தொடையும், இறுதிச் சீர்க்கண் இன்றி ஒழிந்த மூன்று சீர்க்கண்ணும் மோனை முதலாயின வரத்தொடுப்பின் கூழைத் தொடையும், முதல் அயல்சீர்க்கண் இன்றி ஒழிந்த மூன்று சீர்க்கண்ணும் மோனை முதலாயின வரத்தொடுப்பின் மேற்கதுவாய்த் தொடையும், ஈற்று அயல் சீர்க்கண் இன்றி ஒழிந்த மூன்று சீர்க்கண்ணும் மோனை முதலாயின வரத் தொடுப்பின் கீழ்க்கதுவாய் தொடையும், சொல்லப்பட்ட நான்கு சீர்க்கண்ணும் மோனை முதலாயின வரத்தொடுப்பின் முற்றுத் தொடையும் ஆம் என்றவாறு. `ஏனை' என்ற மிகையானே, இரண்டாம் எழுத்து ஒன்றிவரினும் முதல் எழுத்து எல்லாம் தம்முள் ஒத்த அளவினவாய் வந்து கட்டு என்பதற்கு பட்டு என்பது அல்லது பாட்டு என்பது எதுகை ஆகாது எனவும்; முதல்நிலை முதலிய உயிர் அளபெடை மூன்றும், குறில் இணைக்கீழும் குறில் கீழும் வரும் ஒற்று அளபெடை இரண்டும், தம்முள் ஒன்றிவரத் தொடுப்பது சிறப்பு உடைத்து எனவும் கொள்க. `ஈர் இரண்டு' எனவே இணைமோனை முதலிய எல்லாம் அளவடிக்கண்ணே வழங்கப்படும் என்பதூஉம், `இறுவாய் ஒப்பின் இயைபுத்தொடை' எனவே அதன் விகற்பம் ஆகிய இணைஇயைபுத்தொடை முதலிய ஏழும் ஈற்றுச்சீரே முதல் சீராகக்கொண்டு வழங்கப்படும் என்பதூஉம் பெற்றாம். | |
|
|