பக்கம் எண் :

செய்யுளியல் - நூற்பா எண் 16

95

 
     `சொல்லி நிறுத்த' என்ற மிகையானே அசையினும் சீரினும் இசையினும்
(ஓசையினும்) எல்லாம் இசையாது வருவது சிறப்புடைச் செந்தொடை எனவும், இரட்டைத்
தொடை ஈற்று எழுத்து ஒன்று குறையினும் இழுக்காது எனவும் கொள்க.

செந்தொடைக்குச் செய்யுள் :

 

`பூத்த வேங்கை வியன்சினை ஏறி,
மயில்இனம் அகவும் நாடன்
நன்னுதல் கொடிச்சி மனத்தகத் தோனே'
 
 

 - யா. கா. 18 மே

 
எனவும்,

இரட்டைத் தொடைக்குச் செய்யுள் :

 

`ஒக்குமே, ஒக்குமே, ஒக்குமே, ஒக்கும்,
விளக்கினுள் சீறெரி ஒக்குமே, ஒக்கும்;
குளக்கொட்டிப் பூவின் நிறம்.'
 
 

- யா. கா. 18 மே

 
எனவும்,

அந்தாதித் தொடைக்குச் செய்யுள் :

 

`உலகுடன் விளக்கும் ஒளிகிளர் அவிர்மதி
மதிநலன் அழிக்கும் வளங்கெழு முக்குடை
முக்குடை நீழல் பொற்புடை ஆசனம்
ஆசனத் திருந்த திருந்துஒளி அறிவன்
ஆசனத்து இருந்த திருந்துஒளி அறிவனை
அறிவுசேர் உள்ளமொடு அருந்தவம் புரிந்து
துன்னிய மாந்தரது என்ப
பன்னருஞ் சிறப்பின் விண்மிசை உலகே.'
 
 

- யா. கா. 18 மே

 
எனவும் வரும். பிறவும் அன்ன.  (16) 

                                                     

விளக்கம்

  `போற்றுமின் போற்றுமின் போற்றுமின் போற்றுமின்
கூற்றம் குமைக்க வருமுன், நமரங்காள்!
ஏற்றுவந்தான் பொற்றாள் இணை'
 
 

 - சி. செ. கோ. 26

 
என்பதனை இரட்டைத் தொடைக்கும்,