10 |
இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்
|
இத்தகைய
பத்துப்பொருத்தமும் முறையே அமையப் பெரும்பாலும்
மூவசைச்சீரை முதற்சீராகக்கொண்டு அகலக்கவி
இயற்றப்படும்.
அகலக் கவியுள்
தொடர்நிலைச் செய்யுள் பிள்ளைத்தமிழ் முதலாகக்
காப்பியம் ஈறாகச் சொல்லப்படும் ஐம்பத்தைந்தும்,
அவை போல்வன பிறவும்
ஆம்; அவற்றுள்,
பிள்ளைத்தமிழ்
காப்பு செங்கீரை தால் சப்பாணி முத்தம் வருகை அம்புலி சிறுபறை சிற்றில்
சிறுதேர் என்ற பத்துப்
பருவங்களும் ஆண்பால் பிள்ளைத்தமிழின்
பருவங்களாம். பெண்பால் பிள்ளைத்தமிழுக்குப் பின்மூன்று
பருவங்களாக
ஆண்பாற் பிள்ளைத்தமிழுக்கு உரியனவற்றை நீக்கிக் கழங்கு அம்மானை
ஊசல் என்ற
பருவங்கள் கொள்ளப்படும். பிள்ளைத்தமிழ் சந்தவிருத்தத்தானும்
அகவல் விருத்தத்தானும் பாடப்படும்.
காப்புப் பருவத்தில் காத்தற் கடவுளாகிய
திருமால், சிவபெருமான், பார்வதி, பிரமன், இந்திரன்,
விநாயகன், முருகன்,
சத்தமாதர், திருமகள், கலைமகள், முப்பத்து முக்கோடி தேவர்கள் ஆகியோர்
முறையே காப்பாராக என்று பாடுதல் மரபு. பிள்ளைத்தமிழைக் குழந்தை
பிறந்தபின் மூன்றாம் திங்கள்
முதல் இருபத்தொரு திங்களுக்குள்
ஒற்றைப்படைத் திங்களில் வளர்பிறையில் பாடுதல் வேண்டும்.
அஃது இயலாத
தாயின் மூன்றாம் ஆண்டு ஐந்தாம் ஆண்டு ஏழாம் ஆண்டு இவற்றிலும்
பாடலாம். பிள்ளைத்
தமிழின் காப்புப் பருவத்தில் ஒன்பது அல்லது பதினொரு
பாடல்கள் அமைதல்வேண்டும். ஏனைய
பருவங்கள் பப்பத்துப் பாடல்களைக்
கொண்டனவாதல் வேண்டும்.
2. கலம்பகம்
முதற் பாடல் ஒருபோகாகவோ வெண்பாவாகவோ கலித்துறையாகவோ
அமைதல் வேண்டும். புயவகுப்பு, மதங்கு,
அம்மானை, காலம், சம்பிரதம், கார்,
தவம், குறம், மறம், பாண்,
|