13. ஒலி அந்தாதி
பதினாறு கலை வகுப்பான் பல சந்தங்களை உடைய முப்பது பாடல்கள்
அந்தாதித்தொடையில்
பாடப்படும் பிரபந்தம் ஒலி அந்தாதி ஆகும்.
14. பெயர் இன்னிசை, ஊர் இன்னிசை
பாட்டுடைத்தலைவன் பெயரைவைத்து அவன் சிறப்புக்களை 90, 70, 50
இன்னிசை வெண்பாக்களால்
பாடும் பிரபந்தம் பெயர் இன்னிசை ஆகும்.
15. வருக்கமாலை
மொழிக்கு முதலாகும் வருக்க எழுத்து ஒவ்வொன்றையும்
முதலெழுத்தாகக்கொண்டு ஒவ்வொரு
கவிபாட, அவ்வாறு பாடப்படும்
கவியின் தொகுப்பாகிய பிரபந்தம் வருக்கமாலையாகும்.
16. கைக்கிளை
ஒருதலைக் காமத்தினை ஐந்து விருத்தத்தால் சிறப்பித்துப் பாடும்
பிரபந்தம் கைக்கிளை
ஆகும்.
17. மங்கல வள்ளை
நல்ல சந்தத்தில் உயர்குல மடவரலை ஒன்பது வெண்பாக்களில்
சிறப்பித்துப்பாடும்
பிரபந்தம் மங்கல வள்ளை எனப்படும்.
18. இரட்டை மணிமாலை (பிறிதொரு வகை)
வெண்பாப்பத்தும் விருத்தம்பத்தும் அந்தாதித்தொடையான் பாடுதலும்
இரட்டைமணி மாலையாம்.
19. நேரிசை
இன்னிசைவெண்பாவைப் போலத் தலைவன் பெயரையும் ஊரையும்
சார்ந்துவர 90 70 50
பாடல்கள் நேரிசை வெண்பாவாகப் பாடின் முறையே
பெயர் நேரிசை எனவும், ஊர் நேரிசை எனவும் பெயர்பெறும்.
|