பக்கம் எண் :

New Page 1
பாட்டியல் - நூற்பா எண் 40

 145


                                       

     ‘நிரைஇரண்டாய்ப் பின்புநேர்இறின் அந்தரம், நேர்இரண்டாய்

     நிரைஇறின் மாருதம், நேர்நடுவாகி நிரைஇருபால்

     விரைதருகோதை! வெந்தீக்கணம், நேர்இரண்டின் நடுவே

     நிரைவருமாயின் பருதி; இந்நாற்கணம் நீக்கினவே.’

                                                  - நவ. 23

     ‘துறக்கம்மதி வான்பரிதி காய்ச்சீர் முன்னும்,

          சூழ்காற்றுத் தீநிலம்நீர் கனிச்சீர்ப் பின்னும்,

     நிறுத்து,கணம் இவ்விரண்டாம்; அகவற் சீரின்

          நேர்ஈறு வெள்ளைச்சீர், நிரைவஞ் சிச்சீர்,

     சிறப்புடைஇவ் விரண்டுமாம், கணப்பேர் மற்றும்

          திகழ்இயற்சீர் அயன்திருக்கோக் கருடன் முன்னாம்

     வெறுத்தபின்னும் ஆம்என்ப, இறைவன் நாட்கு

          மேவுகண நாட்பொருத்தம் வேண்டும் மாதோ.’

                                        - சிதம். பாட். 26

 

     ‘கணம்இயல் பொருத்தமே கணம்எனும் சீரினுள்

     முன்னர் இந்திரன், முன்நிரை நிலனே,

     நிரைநேர் நேர்மதி, நேர்நிரை நிரைநீர்,

     இந்நாற்கணம் நன்றாம் இவைமுதல் சீர்க்கே;

     இருவிளங் காய்முறை அந்தரம் சூரியன்;

     இருமாங் கனிமுறை வாயு தீஇவை;

     வருமுதற் சீர்க்கு வழுக்கணம் என்ப.’                   

- தொ. வி. 294

 

     ‘தேமாங் காய்இந் திரகணம், புளிமாங்

     காய்சந் திரகணம், கருவிள மென்கனி

     நிலக்கணம், கூவிளங் கனிநீர்க் கணமிவை

     ஆகும்; கருவிளங் காய்அந் தரகணம்,

     கூவிளங் காய்இர விக்கணம், தேமாங்

     கனிகால் கணம், புளி மாங்கனி தீக்கணம்.’

                                                      

  - மு. வீ. யா. ஒ. 76

                                                           40