148 |
இலக்கண
விளக்கம் - பொருளதிகாரம் |
இஃது ஆசிரிய உரிச்சீர்க்குக் கணப்பொருத்தம் மாட்டேற்றான்
எய்துவித்தலே அன்றி, வேறுகணமும் கூறுகின்றது.
இ - ள் : நேரசை இறுதி ஆகிய தேமா புளிமா என்னும் இயற்சீர்
இரண்டும் வெண்பா உரிச்சீரின் முன்னர்நின்ற தேமாங்காய்
புளிமாங்காய்போல முறையே சுவர்க்ககணமும் சந்திரகணமுமாம் எனவும்,
நிரையசை இறுதி ஆகிய கருவிளம் கூவிளம் என்னும் இயற்சீர் இரண்டும்
வஞ்சி உரிச்சீரின் பின்நின்ற கருவிளங்கனி கூவிளங்கனிபோல நிலக்கணமும்
நீர்க்கணமும் ஆம் எனவும் சிறப்புப்பெற்று நடக்கும். அன்றியும் அவை
பிரமகணமும் இலக்குமிகணமும் சுரபிகணமும் கருடகணமும் என உரிமை
கூறப்பட்டு அகலக்கவி முதற்கண் பயின்று நடக்கும் என்றவாறு.
பாட்டியல் செய்தோர் பலர் ஆகலான், ஒரு சாரார் மூவசைச்சீரே
வரும் எனக் கூறுதலானும், ஒரு சாரார் ஈரசைச்சீர் உடன்கொண்டு
கூறுதலானும் ஈரசைச் சீரும் இலக்கியத்தில் பயின்று வருதலானும்
இவ்வாசிரியர் இரு திறனும் நேர்ந்தார் என்பதாம்.
(42)
விளக்கம்
சேக்கிழார் பெருமான், கம்பர் பெருமான் போன்றாராகிய
பெருங்கவிஞர்தம் தொடர்நிலைச் செய்யுட்களின் முதல்சீர் ஈரசைச் சீராக
உண்மையான், அவற்றிற்கு இலக்கணம் கூறும் முகத்தான் இவ்வாசிரியர்
ஈரசைச் சீரும் கொண்டார். ஒரு சாரார் ஈரசைச் சீர்களுள்ளும் நிரையீறே
கொண்டனர். இவர் தேமா புளிமா கருவிளம் கூவிளம் என்ற ஈரசைச்சீர்
நான்கனையும் கொண்டுள்ளார்.
|