27. பரணி
ஆயிரம் யானைகளைப் போர்க்களத்தில் வென்ற வீரனைப்பற்றிப்
பாடப்படும் பரணி
என்ற பிரபந்தம் கடவுள் வாழ்த்து, கடை திறப்பு,
பாலைவருணனை,
காளிகோட்டவருணனை, பேய்க்கண
வருணனை,
காளிக்குக்
கூளிகூறல், கூளிக்குக் காளிகூறல் இவற்றால் தலைவன்புகழை
உரைத்து
வெட்சிமுதல்
வாகை ஈறாகிய அவன்
சிறப்புக் கூறிக் களம்
வேட்டல் என்ற
பகுப்பு ஈறாக அளவடி முதலாக எனைத்துச்சீரானும்
இரண்டுஅடிப் பாடல்களால்
பாடப்படுவதாகும்.
28. தசாங்கப்பத்து
நேரிசை வெண்பாக்களால் தலைவனுடைய மலை கடல் நாடு ஊர் தார்
குதிரை களிறு
கொடி
முரசு ஆணை என்ற பத்து அங்கங்களையும் பாடும்
பிரபந்தம் தசாங்கப்பத்தாம்.
இது தலைப்புக்கு ஒன்றாகப்
பத்து
வெண்பாக்களைஉடையது.
29. பதிற்றந்தாதி
பத்து வெண்பாவோ பத்துக் கட்டளைக்கலித்துறையோ பொருள் தன்மை
அமையப்
பாடும் பிரபந்தம்
பதிற்றந்தாதி ஆகும்.
30. நூற்றந்தாதி
நூறு வெண்பாவோ நூறு கட்டளைக்கலித்துறையோ பொருள் தன்மை
அமையப் பாடும் பிரபந்தம்
நூற்றந்தாதி ஆகும்.
31. அட்டமங்கலம்
இறைவன் தலைவனைக் காப்பானாக என்று எட்டு அகவல்
விருத்தத்தால்
பொருள்
தொடர்புஉறப்
பாடும் பிரபந்தம்
அட்டமங்கலமாகும்.
32. அலங்காரபஞ்சகம்
வெண்பா கட்டளைக்கலித்துறை அகவல் விருத்தம் சந்த விருத்தம்
ஆகிய
ஐந்தனால்
தலைவன் புகழைப் பொருள் தொடர்பு உறப் பாடும்
பிரபந்தம்
அலங்காரப்பஞ்சகமாகும்.
|