| 
  
    | 150 | 
      இலக்கண
      விளக்கம் - பொருளதிகாரம் |  
  
தசாங்கத்திற்குச் சிறப்புவிதி 
  
803. உற்ற தசாங்கத் தினைஒரு சீரான் 
    முற்ற உரைத்தல்; முறைபிரித்து இசைப்பின் 
    பிழையாம்; புணர்மொழிப் பெயர்ஈற் றின்தொகின் 
    வழுவா காஎன வகுத்தனர் புலவர். 
  
இது தசாங்கத்தினைப் புணர்க்கும் திறத்து ஆவது ஒரு சிறப்புக் கூறுகின்றது.
 
     இ - ள்: பாட்டுடைத்தலைவற்குப் பொருந்திய தசாங்கத்தினை ஒருசீராலே முடிவுபெறப் பாடுவது இலக்கணமாம்; பிரித்து வேறு சொல் முடிபு
 கொடுத்துக் கூறல் குற்றமாம்; பிரித்தவழிப் புணர்மொழிப் பெயர் இறுதிக்கண்
 தொகைச்சொல் கொடுத்து நச்செழுத்து அகற்றிக் கூறின் குற்றமாகாது
 என்றவாறு.
  (43) 
விளக்கம்   
     மலைமுதலிய பத்து அங்கங்களும் தனித்தோ அடையடுத்தோஒரேசீராக அமைக்கப்பட்டமை சான்றோர் செய்யுட்களில் காணப்படும்.
 
 
  
  
    | 
    ‘புகலாகும் இன்பப் பொருப்பும்’ | 
                 -    மலை |  
    | 
      |  
    | 
    ‘தேர்இன்பம் நல்கும் திருநாடும்’ | 
                 -    நாடு |  
    | 
      |  
    | 
    ‘அல்லாது உயர்ந்த அணிநகரும்’ | 
                 -    நகர் |  
    | 
      |  
    | 
    ‘கூறி நடாத்தும் குரகதமும்’ | 
                 -    பரி |  
    | 
      |  
    | 
    ‘காய்ந்த சிவஞானக் கடாக்களிறும்’ | 
                 -    யானை |  
    | 
      |  
    | 
    ‘நார்அகத்துக் கட்டும் நறுந்தொடையும்’ | 
                 -    மாலை |  
    | 
      |  
    | 
    ‘வந்த நவநாத மணிமுரசும்’ | 
                 -    முரசு |  
    | 
      |  
    | 
    ‘ஆக்கி அசைத்தருளும் 
    ஆணையும் | 
                 
    -   ஆணை |  |