| 
  
    | 
பாட்டியல் - நூற்பா எண் 45,46 | 
    153 |            யாழின் 
மொழிவிழி44 இணைமுலைப் பத்து45  
    வில்வாள் வேல்கோல் வேழம் குதிரை 
    நாடுஊர் கொடையை நயந்த விருத்தம்46-54  
    மாப்பெரும் புலவர்சொல் காப்பியம்55 என்னப் 
    பெயர்பெறும் தொடர்நிலை பிறவும் அன்ன. 
  
இஃது அகலக்கவி இரண்டனுள் தொடர்நிலைச் செய்யுள் பெறும்பெயர்வேற்றுமை கூறுகின்றது
 
  
     இ - ள்: பிள்ளைக்கவி முதலாகக் காப்பியம் ஈறாகச் சொல்லப்பட்டஐம்பத்தைந்தும் அவற்றுள் தொகை பெற வகுத்த அகலக்கவி வேறுபாடும்
 அவை போல்வன பிறவும் எல்லாம் தொடர்நிலைச் செய்யுளாம்
 என்றவாறு.
  (45) 
  
விளக்கம் 
  
     பல பாடல்களில் தொகுப்பாகப் பொருள் தொடர்போ, சொல்தொடர்போ, இரண்டுமோ பொருந்த அமையும் தொடர்நிலைச்
 செய்யுட்களின் வகைகள் இந்நூற்பாவில் சுட்டப்பட்டுள்ளன.
 
 
  
ஒத்த நூற்பா 
  
     ‘சாதகம் பிள்ளைக்கவி பரணி கோவைஅர 
          சன்விருத்தம் தொகைநிலை 
     சாரும்ஐந்திணை எண்தரும் செய்யுள் அங்கமொடு 
          தானை அநுராகம் நாமம் 
     தாரகை இரட்டைமணி பன்மணி புகழ்ச்சிபல 
          சந்தம் மெய்க்கீர்த்தி காப்பு 
     தண்டகம் தும்பைஇணை மணிவேனில் மும்மணிவ 
          சந்தம் உற்பவம் நான்மணி 
     ஓதுநவமணி வீரவெட்சி யுடனே வாகை 
          உழிஞை மணி நொச்சி காஞ்சி |