பாட்டியல் - நூற்பா எண்
48 |
157 |
நாமகள் கொழுநன், மாமுகில் ஊர்தி,
ஒற்றைக் கொம்பன், வெற்றி வேலன்,
எழுவர் மங்கையர், இந்திரை, வாணி,
உருத்திரர் அருக்கர் மருத்துவர் வசுக்கள்,
பூப்புனை ஊர்தியில் பொலிவோர், அனைவரும்
காப்ப தாகக் காப்புக் கூறல்.
இது பருவம் பத்தனுள்ளும் முதற் பருவமாகிய காப்பினுக்கு உரைக்கப்படும்
கடவுளர் பெயரும் முறையும் கூறுகின்றது.
இ - ள்: சுபங்கள் எல்லாம் பொலியும் சிவந்த கண்ணை உடைய
மாயோன், சங்கத்தினையும் சக்கரத்தினையும் கைக்கோடலானும் காத்தல்
தொழில் உரிமை பூணுதலானும், பூமடந்தையைப் புணர்தலானும் முன்னர்க்
கூறி, உலகம் பொலிதற்கு ஏதுவாகிய கங்கையாற்றினையும் நிறைநீர் வான்
பிறை மதியினையும் கார்ப்பருவத்தில் பொலியும் கொன்றை மாலையினையும்
சூடிய உமையோர்பாகன் என்று இமையோர் நாதனைப் புகழ்ந்து கூறி,
உலகம் முழுது ஈன்ற பனிவரைச் செல்வியை விருப்பம் மேன்மேல்
கிளைப்பக் கூறி, நாமடந்தை கேள்வன் ஆகிய அயனைப் புகழ்ந்து கூறி,
கறுத்த மேகவாகனனை அதன்பின் புகழ்ந்து கூறி, ஒற்றைக் கொம்பனைப்
புகழ்ந்து கூறி, வீரத்தன்மையைப் பொருந்திய வேலளைப் புகழ்ந்து கூறி,
சத்தமாதர்களைப் புகழ்ந்து கூறி, திருவினைப் புகழ்ந்து கூறி, வாணியைப்
புகழ்ந்து கூறி, பதினொருகோடி உருத்திரரையும் பன்னிரண்டு கோடி
ஆதித்தரையும் இரண்டுகோடி மருத்துவரையும் எட்டுக்கோடி வசுக்களையும்,
புட்பக விமானத்தினை உடைய சந்திரனையும் குபேரனையும்,
|