16
|
இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் |
33. ஊசல்
ஆசிரிய விருத்தத்தினாலோ கலித்தாழிசையாலோ தலைவன்
சுற்றத்தொடும் பொலிவானாக என்று பொருள் தொடர்பு உறப் பாடும்
பிரபந்தம் ஊசல் ஆகும்.
34. சின்னப்பூ
நேரிசை வெண்பாவினால் தலைவனுடைய தசாங்கத்தினை 100, 90, 70,
50, 30 பாடல்கள் அமையப் பாடும் பிரபந்தம் சின்னப்பூ ஆகும்.
35. சதகம்
அகப்பொருளைப்பற்றியோ புறப்பொருளைப்பற்றியோ நூறு கவிகள்
பாடி அமைக்கும் பிரபந்தம் சதகமாகும். இது பெரும்பாலும்
ஆசிரியவிருத்தமாக அமையும்.
36. எண் செய்யுள்
தலைவனுடைய ஊரையோ பெயரையோ, இரண்டனையுமோ விரும்பிப்
பத்து முதல் ஆயிரம் அளவும் பொருள் தொடர்புறப்பாடும்
செய்யுட்களைக்கொண்ட பிரபந்தம் எண் செய்யுள் ஆகும்.
37. ஐந்திணைச் செய்யுள்
புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல் என்ற ஐந்து
உரிப்பொருள்களுக்கும் உரிய குறிஞ்சி பாலை முல்லை நெய்தல் மருதம்
என்ற ஐந்து திணைகளையும் விளக்கிக்கூறும் செய்யுள் - தொகை
ஐந்திணைச் செய்யுளாகும்.
38. நாழிகை வெண்பா
தேவரிடத்தும் அரசரிடத்தும் தோன்றி நடக்கும் செயல் ஒருநாழிகை
அளவில் தோன்றி நடப்பதாக 32 வெண்பாக்கள்பாடி அமைக்கும் பிரபந்தம்
நாழிகை வெண்பா ஆகும்.
|