|
பாட்டியல் - நூற்பா எண்
51 |
165 |
சிற்றில் சிறுதேர்
ஆடவர்க் கே ; கடை
மூன்றுஒழித்து அரிவையர்க்கு
ஆம்கழங்கு அம்மானை
ஊசல் என்றுஇவை;
அவ்விரு பாற்குப்
பத்துஉறுப் பாய்ஒவ்
வொன்று விருத்தம்
பப்பத் தாகப் பாடல்
என்ப.’
- தொ. வி.
257
‘செறிகொலை நீக்கித்
தெய்வம் காப்புஎனத்
தொகைஅளவு வரையும்
இசைவகுப்பு அகவல்
விருத்தம் தன்னால்
வினவுமுறை காப்புச்
சாற்றுசெங் கீரை
தால்சப் பாணி
வழங்கும் முத்தம்
வாரானை அம்புலி
சிறுபறை சிற்றில்
சிறுதேர் பத்தும்,
ஈற்றில் மூன்றுஒழித்து,
ஏந்திழை யார்தமக்கு
உறுகழங்கு அம்மானை
ஊசல் அமைய,
மூன்றுமுதல் இருபத்
தொன்றனுள் ஒற்றைப்
பெறுமதி கொளலாம்
பிள்ளைக் கவியே.’
- பி. ம. 2
‘இமையவர் வேதியர்
இயல்மனர் வைசியர்
சூத்திரர் என்னச்
சொற்றஐ வருக்கும்
முறையே நூறு முதல்அறு
பான்வரை
கணிக்கும்
பிள்ளைக் கவியின் தொகையே.’
- பி. ம. 3
‘மாதம்
இருதிங்களில் காப்பு, ஐந்துசெங்கீரை,
மாதம் ஏழில்
தாலமாம்,
வரைநவம் சப்பாணி,
முத்தமோ பன்னொன்று,
வாரானை சம்வற்சரம்,
ஓதுஒன்றரை வருடம்இந்து,
இரண்டில் சிற்றில்,
ஒலிபறை முழக்கல்
மூன்றில்,
ஊர்இரதம் நாலில்
ஆண்பால்; கழங்குஅம்மானை
ஊசல்பெண்
பாலதாகுமே.’
- பி. தீ. 5
‘தீதில் காப்பே
செங்கீரை தாலே
சப்பாணி முத்தம்
வாரானை அம்புலி
சிறுபறை சிற்றில்
சிறுதேர் இவற்றை
|