பக்கம் எண் :

பாட்டியல் - நூற்பா எண் 52

    167


 

இடையிடை வெண்பாக் கலித்துறை பாடப்பட்டு அந்தாதித்தொடை
முற்றும்உற இறுதியும் முதலும் மண்டலித்துப் பாடுவது கலம்பகமாம்
என்றவாறு.
                                                 

     மண்டலித்துப் பாடுவது அந்தாதித் தொடையால் கூறுவனவற்றிற்கு
எல்லாம் ஒக்கும். மேற்கொண்டு ‘எழும்’ என்றதனால் காலத்தான் மருவிய
பிச்சியார் கொற்றியார் முதலியவும் கொள்க.
 

  (52)

விளக்கம்

 

ஒருபோகு - வண்ணக ஒத்தாழிசைக் கலிக்கு ஓதிய உறுப்பினுள்
     யாதானும் ஒன்று இன்றி வருவது. (தொல். பொ. 460 பே)

 

புயம் - தலைவனுடைய புயங்களின் செயல்களைப் பெரும்பாலும்

     சந்த விருத்தத்தால் வருணித்துக் கூறுவது.

 

மதங்கு - இரு கைகளிலும் வாட்படைகளை ஏந்தி வீசிப் பாடி

     ஆடும் ஒரு மதங்கச் சாதி மங்கையை நோக்கி ஓர் இளைஞன்

     காமுற்றுக் கூறும் கூற்று.

 

அம்மானை - மகளிர் மூவர் தம்முள் வாதம்செய்து அம்மானை

     பாடுவதைக் கூறுவது. முதல் இரண்டு அடியும் அடுத்த இரண்டு

     அடியும் ஈற்றடியும் தனித்தனியே ஒவ்வொருத்தி கூற்று.

 

காலம் - தலைவனைப் பிரிந்த தலைவி கார்காலம் முதலியன தரும்

     இன்பத் துன்பங்களைத் தொகுத்துக் கூறுவது.

 

சம்பிரதம் - இந்திரசால வித்தையில் வல்லவர் தம் சிறப்பினைத்

     தாமே கூறுவது.

 

கார் - பொருள் முற்றி மீளும் தலைவன் மேகத்தோடு கூறுவது.

 

தவம் - தவத்தோர் பெருமை கூறுவது.

 

குறம் - குறத்தி ஒருத்தி தலைவியை நோக்கிக் குறி சொல்லுவது.