பக்கம் எண் :

New Page 1
பாட்டியல் -முன்னுரை

17


            

39. நானாற்பது

              

    காலம், இடம், பொருள் இவைபற்றிப் பொருள் தொடர்பு உறப் பாடும்
 நாற்பது வெண்பாக்கள் நானாற்பது ஆகும்.
              

40. பயோதரப்பத்து

              

    தலைமகளுடைய நகில்களைச் சிறப்பித்துப் பாடும் பத்துப் பாடல்கள்
கொண்ட பிரபந்தம் பயோதரப்பத்தாகும்.
              

41. நயனப்பத்து

              

   தலைமகளுடைய கண்களைச் சிறப்பித்துப் பாடும் பத்துப்
பாடல்களைக்கொண்ட பிரபந்தம் நயனப்பத்தாகும்.
              

42. ஒன்பதுவகை விருத்தம்

              

    அரசனுடைய வில், வாள், வேல், செங்கோல், யானை, குதிரை, நாடு,
ஊர், கொடை இவை ஒவ்வொன்றையும் சிறப்பித்துப் பாடப்படும் பப்பத்து
விருத்தங்கள் அமைந்த பிரபந்தங்கள் முறையே வில்விருத்தம் முதலாக
அவ்வவற்றான் பெயர்பெறும்.
 

43. பெருங்காப்பியம்

              

    அணியியலில் கூறப்பட்ட காப்பிய இலக்கணங்களான் நிறைந்து
விளங்குவதாம்.
              

44. சிறுகாப்பியம்

              

    அறம் பொருள் இன்பம் வீடு என்ற நான்கனுள் ஒன்றோ சிலவோ
 குறைபாடு உற அமைவதாம்.
 

     இணைமணிமாலை இரண்டு. இன்னிசை இரண்டு, நேரிசை இரண்டு,
 எண்செய்யுள்  இரண்டு, வில்விருத்தம் முதலிய ஒன்பது இவற்றைத்
 தனித்தனியே எண்ணின் பொருள்- தொடர்நிலைச்செய்யுளாக இவ்வாசிரியர்
 குறிப்பிடும் எண் ஐம்பத்தைந்து ஆமாறு  உணரப்படும்.
   3 - 4