பக்கம் எண் :

பாட்டியல் - நூற்பா எண் 52

   171


    

    ‘ஆர்புயம் தவம்மதங்கு அம்மானை காலம்

     குறம்மறம் களிமயக்கு ஊசல் வண்டுஊர்

     சித்து இரங்குதல் சம்பிரதம் தழைபாண்

     கைக்கிளை தூதுஇவை கலம்பகக் கூற்றே.’       

 

- பி. ம. 4

 

     ‘வெண்பாக் கலித்துறை வேண்டுஇவற்று ஒன்றால்

     வண்ணம் முன்னுற வருமுதல் உறுப்பு

     வினவின் ஒருபோகு வெண்பாக் கலித்துறை

     அகவல் விருத்த மாயும்வேறு அகவல்

     வெண்பாக் கலித்துறை ஆசிரியம் வஞ்சித்துறை

     மருட்பா வெண்டுறை வஞ்சி கலியினம்

     இவற்றை அந்தாதித்து இயம்பிய கூற்றால்

     கலந்து பாடுவது கலம்பகம் என்ப.’                             

  - பி. ம. 5

 

     ‘நூறு தேவர் தொண்ணூற் றைந்து

     பார்ப்பார் அரசர் தொண்ணூறு அமைச்சர்

     எழுபஃது ஐம்பான் வைசியர் ஆறைந்து

     சூத்திரர் பெறுவரெனச் சொற்றனர் புலவர்.’         

 - பி. ம. 6

 

     ‘அரிய ஒருபோகு வெண்பாக் கலித்துறையும்

          அன்பாய்க்கலி உறுப்பினாலே

    அம்புயவகுப்பு மதங்கம் மறமும் காலம்

          அம்மானை கார்குறம்பாண்

    ஆடும் ஊசல்தவம் சம்பிரதம் வண்டுகளி

          அலர்தழை தூதுஇரங்கல்

    ஆனகைக்கிளை சித்துஎன்று வகைஈ ரொன்பது

          ஆம்உறுப்புக்கள் இயைய,

    வரு மருட்பா கலிப்பா கலிவிருத்தம்

          மடக்குக் கலித்தாழிசை

    மன்னும் ஆசிரிய விருத்தம் ஆசிரியமும்

          வஞ்சித்துறை வெண்டுறை

    வஞ்சிச்செயுள் வஞ்சியாம் விருத்தங்களும்இ

          வற்றாலும் இடையிடையினின்