பக்கம் எண் :

178 இலக

178

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்



கட்டளைக்கலித்துறை நானூறாகத் திணை முதலாகத் துறை ஈறாகக்
கூறப்பட்ட பன்னிரண்டு அகப்பாட்டு உறுப்பும் வழுவின்றித் தோன்றப்
பாடுவது அகப்பொருட் கோவை என்றவாறு.

(56)

விளக்கம்


இருவகை முதற்பொருள்

- நிலன், பொழுது என்பன.
 

பதினான்குவகைக் கருப்பொருள்

- ஆரணங்கு முதலியன.
 

பத்துவகை உரிப்பொருள்

- புணர்தல் முதலியன ஐந்தும்,
அவற்றின் நிமித்தங்கள் ஐந்தும்.
 

கைக்கிளை

- தலைவன்பால் சிறிதுபோது

ஒருதலைக்காமமாகத் தொடங்கி,

பின் ஐந்திணைக் காமமாய்த்

தொடரும் கைக்கிளை.
 

ஆறிரண்டு உறுப்பு

- ‘திணையே கைகோள்’

(இ. வி. பொ. 188) என்ற

நூற்பாவில் கூறப்பட்டவை.

 

ஒத்த நூற்பாக்கள்

‘கோவை என்பது கூறுங் காலை

மேவிய களவு கற்பெனும் கிளவி

ஐந்திணை திரியா அகப்பொருள் தழீஇ

முந்திய கலித்துறை நானூறு என்ப.’

- பன். பாட். 341

‘களவினும் கற்பினும் கிளவி வகையால்

திணைநிலை திரியாச் செம்மைத் தாகி

நாட்டிய கலித்துறை நானூறு உரைப்பது

கோட்டம் இல்லாக் கோவை ஆகும்.’

- பன். பாட். 342

‘ஐந்திணை தழுவிய அகநிலைக் கோவை

தந்தநா னூறும் தாம்கலித் துறையே.’

- பன். பாட். 343