பக்கம் எண் :

New Page 1

பாட்டியல் -முன்னுரை

19


            

4.   அநுராகமாலை

 

    கனவில் தலைவி ஒருத்தியிடம் ஐம்புல இன்பம் நுகர்ந்த தலைவன்
நனவில் தான் கனாக்கண்ட நிகழ்ச்சியைப் பாங்கனிடம் தெரிவிப்பதாக
அமையும் நேரிசைக் கலிவெண்பாப்பாடல் அநுராகமாலையாம்.
 

5.   மெய்க்கீர்த்திமாலை

 

    ஒரு பரம்பரையினர் செய்த நற்செயல்களைச் சொற்சீரடியால் அழகுறப்
புனையும் செய்யுள் மெய்க்கீர்த்தி மாலையாம்.
 

6.   புகழ்ச்சிமாலை

 

     அகவல் அடியும் கலிஅடியும் விரவிய வஞ்சிப்பாவினால் வியக்கத்தகும்
 மகளிரின் சிறப்பினை உரைக்கும் பிரபந்தம் புகழ்ச்சிமாலையாகும்.

7.   நாமமாலை

 

    அகவலடியும் கலிஅடியும் விரவிய வஞ்சிப்பாவினால் மேம்பட்ட
 ஆண்மக்களைப் புகழ்ந்துரைக்கும் பிரபந்தம் நாம மாலையாகும்.
 

8.   தாரகைமாலை

 

    சந்தவிருத்தத்தால் கற்புடை மகளிரின் சிறப்பை உணர்த்தும் பிரபந்தம்
 தாரகை மாலையாம்.
 

9.   உற்பவமாலை

 

    திருமாலுடைய பத்து அவதாரங்களையும் ஆசிரிய விருத்தத்தால் பாடும்
 பிரபந்தம் உற்பவமாலையாம்.
 

 10.  தானைமாலை

 

    ஆசிரியப்பாவினால் அரசனுடைய முன்னணிப் படையைப் பாடும்
 பிரபந்தம் தானைமாலையாம்.