2 |
இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் |
2. வெண்பாப்
பாட்டியல்
இது வெண்பா யாப்பில் அமைந்தது. குணவீர பண்டிதரால்
இயற்றப்பட்டது இதன் காலம் 13ஆம் நூற்றாண்டாகும். பாட்டியல்
நூல்களில் இதுவே பெருவழக்கிலுள்ளது. இது இந்திரகாளீய நெறியைச்
சேர்ந்தது. இதன்கண் 102 நூற்பாக்கள் உள்ளன.
3.
நவநீதப் பாட்டியல்
நவநீத நடர் என்பவரால் கட்டளைக்கலித்துறை யாப்பில் 14ஆம்
நூற்றாண்டில் அகத்திய நெறியை ஒட்டி 102 காரிகைகளில் அமைந்த
இந்நூலுக்குப் பழைய உரையும் உள்ளது.
4. சிதம்பரப்
பாட்டியல்
புராணத்திருமலைநாதருடைய மகனாராகிய பரஞ்சோதியாரால் 16ஆம்
நூற்றாண்டில் ஆசிரிய விருத்தயாப்பில் பாடப்பட்ட இந்நூல் 5
இயல்களையும் 47 பாடல்களையும் கொண்டு செய்யுளியல்செய்திகள்
பாட்டியல்செய்திகள் ஆகிய இரண்டனையும் விளக்கிச் செல்கிறது.
5. பிரபந்த
மரபியல்
சிதம்பரப் பாட்டியலுக்குப் பின்னர்த் தோன்றிய பிரபந்த மரபியல்
என்ற நூலில் பிரபந்தங்கள் 96 என்ற வரையறை குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்கண் ஏறத்தாழ 90 பிரபந்தங்களின் இலக்கணம்
விரித்துரைக்கப்பட்டுள்ளது.
6.
இலக்கணவிளக்கப் பாட்டியல்
பாட்டியல் நூல்களில் மிகத் தெளிவாகவும் சிறப்பாகவும் அமைந்து
ஆசிரியராலேயே உரையும் வரையப்பெற்ற சிறப்பினை உடைய
இப்பாட்டியல் 181 நூற்பாக்களை உடையது. இதன் காலம் 17ஆம்
நூற்றாண்டாகும்.
|