பக்கம் எண் :

New Page 1

20                  

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


         

11.   வரலாற்றுவஞ்சி

 

    போர்க்களத்தில் செல்லும் படைஎழுச்சியைப் பாடும் அகவற்பா
வரலாற்று வஞ்சியாகும்.
  

12.  செருக்களவஞ்சி

 

    அகவற்பாவால் போர்க்கள நிகழ்ச்சியைக் கூறும் பிரபந்தம்
 செருக்களவஞ்சியாம்.
  

13.  புறத்துறை

 

    ஆசிரியப்பாவால் வெட்சி, காஞ்சி, உழிஞை, நொச்சி, வாகை
 முதலியவற்றைப் பாடும் பிரபந்தங்கள் அவ்வப்பெயரான் அமையும்.
  

14.  குழமகன்

 

    கலிவெண்பாவினால் பெண்கள் கையில் வைத்திருக்கும்
 சிறுவனைப்பற்றிப்பாடும் பிரபந்தம் குழமகனாகும்.
  

15.  பாதாதிகேசம்

 

    கலிவெண்பாவினால் உத்தமமான ஆண்கள் பெண்கள் ஆகிய
 தெய்வங்களைப் பாதம்முதல் முடி ஈறாக வருணித்துப் பாடும் பிரபந்தம்
 பாதாதிகேசம் எனப்படும்.

 

 16.  கேசாதிபாதம்

 

   கலிவெண்பாவினால் உத்தமமான ஆடவர் மகளிர் ஆகிய மக்களை
முடிமுதல் அடி ஈறாகப் பாடும் பிரபந்தம் கேசாதி பாதமாகும்.
  

 17.  யானைத்தொழில்

 

    யானை தோன்றும் இடம், அழகு, உயரம், வயது, குலநன்மை உடல்
பரிமாணம், மும்மதம் கோடல், அடுத்த பொழுதில்கொல்லுதல், 
அரசனைக்கண்டு அறிதல் ஆகிய இவற்றை வஞ்சிப்பாவால் தொடுத்துப்
பாடும் பிரபந்தம் யானைத்தொழில் ஆகும்.