பக்கம் எண் :

New Page 1

பாட்டியல் -முன்னுரை

23


            

அகலக்கவிச் சிறப்பு

 

    அகலக்கவியில் தலைவனுடைய பெயரையும் அவனது ஊர்ப்
 பெயரையும் எதுகையில் அமைத்துப் பாடுதல் அதற்குத் தனிச் சிறப்பாகும்.

 

பா - வழு

 

    தெளிந்த வழக்கினையும் சிறந்த பொருளையும் விடுத்துச் செவியின்பம்
 நீக்கி வடசொற்களை மிகுத்து இலக்கணச் சொற்களை விடுத்து வழூஉச்
 சொற்களைப் புணர்த்தலும் வினாவின்றி மயங்கக் கூறுதலும் வழுவாகும்.
 

அறுவகை ஆனந்தம்

 

    ஆனந்தம் ஆகிய எழுத்தானந்தம், சொல்லானந்தம், பொருளானந்தம்,
 யாப்பானந்தம், தூக்கானந்தம், தொடையானந்தம் என்ற அறுவகைக்
 குற்றமும் அகற்றிப் பிரபந்தங்கள் அமையப்பெறல் வேண்டும்.
 

அவையடக்கியல்

 

    நன்கு கற்றவன் பிரபந்தம் இயற்றினாலும் அரங்கேற்றும் அவையில்
 உள்ளாரிடம் தான் குறையுடையவனாகக் கூறித் தன் குற்றங் களைந்து
 குணம் கொள்ளுமாறு வேண்டுதல் அவையடக்கியல் ஆகும்.
 

பாயிரமும் நூலும்

 

    எல்லா நூல் முகத்தும் உரைக்கப்படும் பொதுப்பாயிரமும், ஒவ்வொரு
 நூலுக்கும் சிறப்பாக அமையும் சிறப்புப் பாயிரமும் எனப் பாயிரம் இரு
 வகைப்படும்.

 

     நூல் என்று சொல்லப்படும் இலக்கணம் - முதலும் முடிவும்
 மாறுபடாமல் தொகையினும் வகையினும் பொருளை விளக்கி, தன்கண்
 சிறந்த உரை அமையப்பெற்றுப் பத்து வகைக் குற்றமும் நீங்கி
 அக்குற்றங்களை எதிர்மறுத்துக் கொள்ளப்படும் பத்து வகை