232 |
இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்
|
மும்மணி மாலை நான்மணி மாலை
கலம்பக மாலை மும்மணிக் கோவை
யருங்கலி யொலியே யானைத் தொழிலே
வருக்க மாலை நாம மாலை
திருக்கிள ரின்னிசை சிலைபரி கரியே
யெழில்புனை வாள்குடை தொழில்புனை வேல்கோ
லழிவி னாடூ ரைம்படை விருத்தம்
நாழிகைக் கவியே நவமணி மாலை
கைக்கிளை யரிபிறப் பட்டமங் கலமே
யில்லற வெள்ளை யெழில்புனை தாரகை
சொல்லிய தாண்டகந் துகளறு பதிகஞ்
சீர்மெய்க் கீர்த்தி செருக்கள வழியே
யாற்றுப் படைவகை கண்படை துயிலெடை
விளக்கு நிலையே வெஞ்சினக் கடாநிலை
யெண்ணிய யாண்டே கண்ணிய பறைநிலை
யரும்பொரு ணிறுத்த வந்தா தித்தொகை
புறநிலை வாயுறை செவியறி வுறூஉவே
பாத மாதி பணைமுலை நயனங்
குற்றமி லுழத்தி குறத்திப் பாட்டே
யொருபா வொருபஃ திருபா விருபஃது
கோவை கணக்கே தொடர்நிலை பாட்டே
கடைநிலை கையறு நிலையெனக் கருதி
யிடனறி புலவ ரியம்பின ரினமே.’
- பன். பாட்.
172
95
வளமடல்
856. அறம்பொருள் வீடுஎனும் அம்முக் கூற்றின்
திறம்கடிந்து அரிவையர் திறத்துஉறும் இன்பம்
பயன்எனக் கலிவெண் பாவால் தலைவன்
பெயர்எது கையினில் பேசுதல் வளமடல்.
இது வளமடல் இலக்கணம் கூறுகின்றது.
|