238
|
இலக்கண
விளக்கம் - பொருளதிகாரம் |
‘குழமகனை அடையாளம் கலிவெண் பாவால்
கூறிஅவன் மறுகணையக் காதல் கூர்ஏழ்
எழிற்பேதை பதினொன்று பெதும்பை பன்மூன்று
இயல்மங்கை பத்தொன்பான் மடந்தை ஐயைந்து
அழகரிவை முப்பஃதோர் தெரிவை நாற்பான்
ஆம்வயது பேரிளம்பெண் முதலாய் உள்ளோர்
தொழஉலாப் போந்தது உலா.’
- சித. பாட்.
37
‘தேவர் மக்களில் சிறந்தோன் ஒருவனாய்
புரவியும் பாண்டிலும் பொலியப் பவனிவரு
குழமகன் குலம்முத லியஅடை யாளம்
குறிப்பின் கலிவெண் பாவில் கழறி
அவன்தெரு அணைய ஏழ்பரு வத்துக்
கண்டோர் உவக்கக் கவின்தரு வயதுஏழ்
பேதை; பன்னொன்று பெதும்பை; பன்மூன்று
மங்கை; பத்தொன்பான் மடந்தை; ஐயைந்து
அரிவை; முப்பஃது தெரிவை; நாற்பான்
பேரிளம் பெண்எனும் பெண்முத லானோர்,
தொழஉலாப் போந்தது உலாஎனப் படுமே.’
- பி. ம. 31
‘உலாவென மலைநதி ஊர்நாடு உயர்மாலை
குலாவிய பரிகரி கொடிமுரசு உயர்கோல்
இசைந்த தசாங்கமும் ஏழ்பரு வத்தார்
வியந்து தொழுதலும் வேண்டுறுப் பாய்அக்
கலிவெண் பாவால் குலமகற் புகழ்தலே.’
- தொ. வி. 260
‘மிக்க இளமைப் பருவமாய்
உற்றதலைமகனைப் பிறப்பும் பரம் பரையில்
உறும் குலம் இன்னான் என்பதாய்
உயர் தலைமையாய் மாதர் புடைசூழவே பருவம்
உள பெண்கள் கண்டு தொழவே
மத்த கயம்மீதும் பரி சிவிகைமீதும் பவனி
வருதலை வனைத் துதித்து.
|