பக்கம் எண் :

New Page 1

26                 

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


         

முதுமொழி

 

    ஏது நுதலிய முதுமொழி, நுண்மை சுருக்கம் ஒளிஉடைமை வெண்மை
 என்பன விளங்கத் தோன்றிக் குறித்த பொருளை முடித்தற்கு வர
 உதவுவதாகும்.

 

மந்திரம்

 

    நிறைமொழி மாந்தர் ஆணையான் உரைத்த மறைமொழிகளே மந்திரம்
 என்று கூறப்படும்.
 

குறிப்பு

 

    எழுத்தினொடும் சொல்லினொடும் புணராவாகிப் பொருட்கண்
 அபிநயத்தால் கிடப்பனவே குறிப்புச் சொல்லாம்.
 

மரபு வகை

 

    மரபாவது வழக்கு மரபு செய்யுள் மரபு என்று இரு வகைப்படும்.
 

வழக்கு

 

    அவற்றுள் வழக்காவது அகத்தியனாரும் மார்க்கண்டேயனாரும்
 தலைச்சங்கத்தாரும் போல்வாரிடம் காணப்படுவதாம்.
 

இளமைப் பெயர்

   

    இளமைப் பெயர்கள் பார்ப்பு பறழ் குட்டி குருளை கன்று பிள்ளை மக
 மறி முதலியனவாம். பெரும்பாலும் இவைகளே இளமைப் பெயர்களாம்.
 

அறிவுகள்

 

    ஊற்றான் அறிவதே ஓரறிவு; ஊறும் சுவையும் ஈரறிவு; ஊறும் சுவையும்
 நாற்றமும் மூவறிவு; ஊறும் சுவையும் நாற்றமும் ஒளியும் நாலறிவு; ஊறும்
 சுவையும் நாற்றமும் ஒளியும் ஒலியும் ஐயறிவு. ஊறு சுவை நாற்றம் ஒளி
 ஒலி இவற்றொடு மனஅறிவும் சேர ஆறறிவாம் என்று சான்றோர்
 வரையறுத்தனர்.