268
|
இலக்கண
விளக்கம் - பொருளதிகாரம்
|
இ - ள்: சூடுவன பூவும், பூசுவன சாந்தும், உடுப்பன கலையும்,
அலங்கரிப்பன அணியும், வெள்ளையும் சிவப்பும்
கருமையும்
பொன்மைநிறமும் ஆம் என்றவாறு.
(124)
விளக்கம்
மருட்பாவிற்குக் கருஞ்சிவப்பை விடுத்து வெண்சிவப்பு நிறம்
கொள்ளப்படும் என்பது.
ஒத்த நூற்பாக்கள்
(118 - 124)
‘அந்தணர் சாதி ஆகிய வெள்ளைக்குச்
சந்திரன் தன்னொடு தகைமிகு வியாழம்
கடவுளர்; கார்த்திகை முதல்ஏழ் நாளாம்;
மீனம் கடகம் தேளே ஓரை;
சந்தனம் விரைபூ அந்தண் மல்லிகை;
வெண்மதி நிறனே வண்ணம்; நிலனே
முல்லை என்னச் சொல்லினர் புலவர்.’
- பன். பாட். 162
‘காவலர் சாதி ஆகிய அகவற்கு
ஆகிய கடவுளர் செங்கதிர் செவ்வாய்;
நாளே மகம்முதல் நாள்ஏழ் ஆகும்;
சிங்கம் தனுவே மேடம் ஓரை;
செஞ்சந் தனம்விரை கமழும் பூவே;
செந்நிறம் நிறனே; நன்னிலம் குறிஞ்சி.’
- பன். பாட். 163
‘நெடுநிலைக் கலியே வணிகர் சாதி
கடவுளர் சனிபுதன்; கருதிய நாளே
அனுடம்முதல் ஆறே; ஓரை துலாம்குடம்
மிதுனம்; சந்தனம் விரைபூச் சண்பகம்;
பொன்னிறம் நிறனே; நன்னிலம் நெய்தல்.’
- பன். பாட். 164
|