பக்கம் எண் :

New Page 1

பாட்டியல் -முன்னுரை

27


            

 புல்லும் மரனும் ஓரறிவின; முரளும் நந்தும் ஈரறிவின; சிதறும் எலும்பும்
 மூவறிவின; நெண்டும் தும்பியும் நாலறிவின; மாக்கள் ஐயறிவின; மக்களே
 ஆறறிவினர். இவற்றிற்குக் கிளையும் பிறப்பும் உண்டு என்பதும்
 கொள்ளப்படும்.

 

     மக்கள் யாக்கையில் பிறந்து ஆறறிவுற்ற உயிர்கள் வினைவயத்தால்
 கசேந்திரனைப்போல விலங்காய்ப் பிறந்தவழியும் முன்னை ஆறறிவு
 உறுதலும் ஒரோவழி உண்டு.

 

ஆண்பாற் பெயர்

 

    ஆண்பால் மரபுபெயர்கள் ஏறு, ஏற்றை, ஒருத்தல், களிறு, சே, சேவல்,
 இரலை, கலை, மோத்தை, தகர், உதள், உம்பல், போத்து, கடுவன், கண்டி
 முதலியனவாம்.

 

பெண்பாற் பெயர்

 

    பெண்பால் மரபுபெயர்கள் பேடை, பெடை, பெட்டை, பெண், மூடு,
 நாகு, கடமை, அளகு, மந்தி, பாட்டி, பிணை, பிணவு, பிடி முதலியனவாம்.
 

 புல்லும் மரனும்

 

    புறத்தே வயிரமுடையன புல் எனவும் அகத்தே வயிரம் உடையன மரம்
 எனவும் வழங்கப்பெறும்.
 

      தோடு மடல் ஓலை ஏடு இதழ் பாளை ஈர்க்கு குலை முதலியன
 புல்லின் உறுப்புக்களாம்.

 

     இலை முறி தளிர் தோடு சினை குழை பூ அரும்பு நனை முதலியன
 மரத்தின் உறுப்புக்களாம்.
 

     காய் பழம் தோடு செதிள் வீழ் என்பன புல் மரம் என்ற இரண்டற்கும்
 பொதுவான உறுப்புக்களாம்.

 

சில மரபுகள்

 

    அரசர்க்கு உரிய தலைமைச் சிறப்புக்களை முகமன்பற்றித்
 தானைத்தலைவர் குறுநிலமன்னர் முதலியோர்க்குக் கூறும் மரபும்
 வழக்கினுள் உண்டு.