பக்கம் எண் :

பாட்டியல் - நூற்பா எண் 124   

  271


 

     ‘ஆசிரியம் வஞ்சி கலிவெண் பாஎன்று

     இம்முறை யால்வைத்து இயம்புங் காலை

     மீனம் கடகம் தேளே என்றும்

     சிங்கம் தனுவே மேடம் என்றும்

     இடபம் கன்னி மகரம் என்றும்

     துலாத்தொடு குடமே மிதுனம் என்றும்

     ஒட்டிய ராசிமரபு ஓர்தல் நெறியே.’                               

- பி. ம. 48

 

     ‘மதிகுரு வெள்ளை; செங்கதிர் செவ்வாய்

     இன்னகவல்; புகர்வஞ்சி; புந்திசனி கலியே;

     கோளமை நாற்பாவும் கொள்ளும் மரபே.’                         

- பி. ம. 49

 

     ‘வெண்பா முதல்வஞ் சிப்பா இறுதி

     நான்குபா வினுக்கும் நாளும் கிரகமும்

     நிலனும் குலனும் நிறமும் இராசியும்

     ஆகிய இருமூன்று இலக்கணப் பகுதி

     குறித்தார் முற்றுணர் குரவர் என்ப.’                       

 

- மு. வீ. யா. ஒ. 50

 

     ‘அவற்றுள்,

     வெண்பா வெண்ணிறம்; விருச்சிகம் கார்த்திகை

     முதலிய எழுநாள்; முற்படு விருச்சிகம்

     மீனம் இராசி; விப்பிர குலம்; மதி

     குருவே கிரகம்; குழுமிய முல்லை

     இருநிலம்; மற்றதன் இயல்பென மொழிப.’                          

 ’’     51

 

     ‘அகவல் செந்நிறம்; அரையர் குலம்; மகம்

     பூரம் முதலிய எழுநாள்; மேடம்

     சிங்க இராசி; செங்கதிர் செவ்வாய்

     கிரகம்; குறிஞ்சி நிலனா கும்மே.’                                 

 ’’     52

 

     ‘கலிபொன் நிறம்; குலம் காமரு வணிகம்,

     அகணி நெடுநிலம்; அனுடம் முதலிய

     ஆறுநாள்; மிதுனம் கும்பம் துலாமும்

     இராசி; புதன்சனி கிரகம் என்று இயம்புவ.’ 
      

’’     53