| 
  
    | 272 | 
இலக்கண
விளக்கம் - பொருளதிகாரம் |    
    
‘வஞ்சிநிறம் கறுப்பு; வாருதி நெய்தல் 
    
நிலன்; கடைக் குலம்;அவிட் டம்முதல் ஏழும் 
    
நாள்; இட பம்கனி மகரம் இராசி; 
    
வெள்ளி இராகு கிரகம் என்ப.’   
             
           - மு. வீ. யா. ஒ. 54 
                                       
         
124 
 
 
கவிக்கு
ஒரு சிறப்பு
 
 
 
885. தலைவன் பேர்ஊர் சாதித்து எதுகையின்
 
   
நிலையுற அநுவில் நிறுத்தல் சிறப்பே.
 
 
 
இது
மேற்கூறிப்போந்த கவிக்கு ஒரு சிறப்புக் கூறுகின்றது. 
 
 
    
இ - ள்; பாட்டுடைத் தலைவன் இயற்பெயரையும் ஊர்ப்பெயரையும்உகந்து எதுகையின் நிலையுறல் அநு எழுத்தின் நிலையுறலாகப்
பாடுதல்
 சிறப்பு என்றவாறு.          
                                                        
(125)
 
 
 
விளக்கம்
 
 
 
    
தலைவன் பெயர் முதற்பாட்டிலேயே எதுகையில் நிலையுறல்வேண்டுவதின்று; நூலுள் யாண்டேனும் இருப்பின் அமையும்
 
 
 
    
‘நச்சு நாகத்தின் ஆரழல் சீற்றத்தன் 
    
அச்ச முற்றடைந் தார்க்கமிர்த தன்னவன் 
    
கச்சு லாமுலை யார்க்கணங் காகிய 
    
சச்சந் தன்னெனும் தாமரைச் செங்கணான்.’  
 
- சிந்தா. 
  
    
‘மசரதம் அனையவர் வரமும் வாழ்வுமோர் 
    
நிசரதக் கணைகளால் நீறு செய்யயாம் 
    
கசரதத் துரகமா கடலன் காவலன் 
    
தசரதன் மதலையாய் வருதும் தாரணி.’  
 
 - இராமா. 
    
‘கராமலை யத்தளர் கைக்கிரி எய்த்தே 
    
அராவணை யிற்றுயில் வோயென அந்நாள் 
    
விராவி அளித்தருள் மெய்பொரு ளுக்கே. 
     இராமன் எனப்பெயர் இட்டனர் அன்றே.’  
                         
- இராமா. 
போல்வன
காண்க. |