| 
  
    | பாட்டியல்
- நூற்பா எண் 127 | 
     275 |     
‘சொல்முறை வழீஇய
சொல்லா னந்தமும்
 
   
புகழ்ச்சிநிலை திரிந்த பொருளா னந்தமும்
 
   
யாப்புநிலை திரிந்த யாப்பா னந்தமும்
 
   
தூக்குநிலை திரிந்த தூக்கா னந்தமும்
 
   
தொடையியல் திரிந்த தொடையா னந்தமும்;
 
   
நடையறி புலவர் நவைஇவை என்ப.
 
 
 
இஃது
இயற்பெயர்க்கண் விலக்கப்படும் ஆனந்தம் இவை என்கின்றது. 
 
 
    
இ - ள்: நிலஉலகில் பெரிய புகழ்உடம்பு நிலையுறல்
உறத் தேவர் உலகில் தேவர் உடம்போடு கூடிய அறிவுடையோர்
கூறிய அறுவகைப்பட்ட
 ஆனந்தம் ஆவன, எழுத்தியலில் திரிந்த
எழுத்தானந்தமும், சொல்லியலில்
 திரிந்த
சொல்லானந்தமும், புகழ் வசையாய்த் திரிந்த
பொருளானந்தமும்,
 யாப்பு என்னும் உறுப்பில் திரிந்த
யாப்பானந்தமும், தூக்கு என்னும்
 உறுப்பில் திரிந்த
தூக்கானந்தமும், தொடை உறுப்பில் திரிந்த
 தொடையானந்தமும்
ஆம். இலக்கிய நடையும் இலக்கண நடையும்
 ஆராய்ந்த
புலவர் அவ்வானந்தங்கள் இயற்பெயர் சார்ந்து
வாராமல்
 நீக்குதலை விரும்புப என்றவாறு.
 
 
 
    
அதிகாரத்தான் இயற்பெயர் என்பது வருவிக்கப்பட்டது. 
 
 
    
என்னை? 
 
 
    
‘இயற்பெயர் சார்த்தி எழுத்துஅளபு எழினே 
    
இயற்பாடு இல்லா எழுத்தா னந்தம்.’ 
 
 
    
‘இயற்பெயர் மருங்கின் மங்கலம் ஒழியத் 
    
தொழிற்சொல் புணர்ப்பின்அது சொல்லா னந்தம்.’  |