பக்கம் எண் :

278                      இலக

278 

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


 

     ‘என்னிற் பொலிந்தது’ - என்னைவிடத் தலைவியின் முகம் ஒளி
மிக்கிருக்கின்றது என்பதனை உட்கொண்டு தன்னைவிட முகஒளி
குறையுமாறு, ஒளி வீசி விரிந்து விளங்கும் வெண்குடைக்கீழ்ச் செங்கோல்
செலுத்தும் விசையன் என்ற தலைவனது ஒளிவீசி விளங்கும்
வேலின் ஒளியைக்கொண்டு குளிர்ந்த மதியம் புறப்படுகின்றது என்பது.
 
     ‘விசையன்’ என்ற தலைவன் பெயரை அடுத்து ‘எரிந்து’ (தீப்பற்றி)
என்ற அமங்கலச் சொல் வந்துள்ளமை பொருத்தம் அற்ற சொல்
சேர்தலாகிய சொற்குற்றம் என்பது.
 
     ‘முரணில்’ தெற்கண் வாயில் திறவாத பட்டி மண்டபத்தார் பொருட்டு
நக்கீரர் ஒருவன் சாவப்பாடிய அங்கதப் பாட்டு இது. (தொ. பொ. 490 பே)
மாறுபாடு அற்ற பொதிய மலையிடத்தானாகிய நம்மால் தமிழுக்கு

முதலாவானாய்க் கடவுளாகப் பாராட்டப்படும் அகத்தியன் புகழ் வாழ்க.
கபிலபரணர் தம் புகழ் வாழ்க. தன் வாழ்க்கைக்குப் பாதுகாவல் தேடிக்
கொள்ளாத. சாவை விரும்புவானாகிய, குயவர் மரபினனாகிய, குயக்கோடன்
இறுதி அடைவானாக. சுவாகா (இது சத்த கோடி மந்திரங்களுள் ஒன்று).
இதனுள் பாடப்படுவானாகிய குயக்கோடன் அரண் இல்லான் எனவும்
ஆனந்தத்தை (சாக்காட்டை) விரும்புபவன் எனவும் அவன் உயிருக்கு ஏதம்
வருமாறு பாடியது பொருளான் அமையும் குற்றம் ஆயிற்று. இப்பொருட்
குற்றம் பாட்டுடையான்  உயிர் போக்கிற்று என்பது வரலாறு. ஏனையவற்றை
இவ்வாசிரியர்விளக்கவில்லை. இனி, ஆனந்தம் பற்றி யாப்பருங்கலம் கூறுவன
பின்வருமாறு.

 

     ‘ஆனந்தம் அறுவகைப்படும்; எழுத்தானந்தமும், சொல்லானந்தமும்,
பொருளானந்தமும், யாப்பானந்தமும், தூக்கானந்தமும், தொடையானந்தமும்
என.
 

     ‘உறுபுகழ்..........................ஆனந்தம்மே.’

     அவைதாம்,

     ‘இயல்நெறி........................நாடினர் இவையே.’