பாட்டியல்
- நூற்பா எண் 127
|
279 |
எழுத்தானந்தமும்
சொல்லானந்தமும் யாப்பருங்கல உரை கூறியவாறே
இவ்வாசிரியரும் கூறியுள்ளார்.
பொருளானந்தமாவது - பாட்டுடைத்தலைவன் நாட்டின்
யாதானும்
ஒன்றனைச் சிறப்பித்துச் சொல்லலுற்ற
இடத்து அத்திணைக்கு உரிய
இறைச்சிப் பொருளை
ஊறுபடச் சாவவும் கெடவும் சொல்லுவதூஉம்,
புகழ்தலுற்ற இடத்து ஆகாத பெற்றியின் மங்கலம் அழியச்
சொல்லுவதூஉம்,
மங்கலமாகிய உவமையான் மங்கலமில்லாத
உபமேயத்தை உவமிப்பதூஉம்,
தலைமகனோடு உவமிக்கப்பட்டதற்கு
இடையூறுபடச் சொல்லுவதூஉம்
முதலாக உடைய எனக்
கொள்க. என்னை?
‘இறைச்சிப் பொருளை.................................பொருளானந்தம்’
என்றாராகலின்.
வரலாறு:
‘முறிமே யாக்கைதன் கிளையொடு துவன்றிச்
சிறுமையுற்ற களையாப் பூசல்.’
- மலைபடு.
313-14
என
மலைபடுகடாத்துக் கூத்தரை ஆற்றுப்படுப்பான் ‘நீர்போம்
வழியுள்
இன்னவும் இன்னவும் ஏதங்களாவன: அவற்றைச்
சாராதே போமின்;’
என்பான். ‘குரங்கு ஒரு வரை மேலிருந்து
வழுவி ஒரு விடரகம்புக்கு
விழுந்தது கண்டு மற்றைக் குட்டியும்
தாயும் விடரகம்புக்கு விழுந்தன; வீழக்
குரங்குகள்
எல்லாம் அவற்றுக்கு இரங்கி அழப் பெரியதோர்
ஆரவாரம்
எழுந்தது; அவ்வரையை ஒருவிப்போமின்’ என்றான்.
அவன் மலைக்கு உரிய
இறைச்சிப் பொருளாகிய (கருப்பொருள்)
குரங்கிற்கு இடையூறு
சொன்னமையால் இது பொருளானந்தம்.
‘கணங்கொள் தோசையின் கதுப்புஇகுத்து அசைஇ
விலங்குமலைத்து அமர்ந்த சேயரி நாட்டத்து
இலங்குவளை விறலியர் நிற்புறம் சுற்ற’
- மலைபடு. 44-46
என்பது,
பீலி விரித்துப் பலமயில் இருந்தாற்போல வழிவந்து
அசைந்த
வருத்தத்தால் தம்தம் கேசங்களை எடுத்து
முடிக்க
|