28
|
இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் |
நூல் கரகம் முக்கோல் மணை என்பன அந்தணர்க்கு உரிய
படை குடை கொடி முரசு புரவி களிறு தேர் தார் முடி செங்கோல்
போல்வன அரசர்க்கு உரிய.
வாணிகஞ் செய்யுந்தொழில் வணிகருக்கு உரியது.
உழுது உணவு உண்டாக்குதலே வேளாளர்க்கு உரியது.
அந்தணர்களும் அரசுரிமை எய்துதல் உண்டு.
புலவர்வகை
புலவர் கவி கமகன் வாதி வாக்கி என நால்வகையர்.
கவி
ஆசு மதுரம் சித்திரம் வித்தாரம் என்ற கவி வகைகளைப் பாடும்
புலவன் கவி எனப்படுவான்.
கமகன்
நிறைந்த கல்வியும் அறிவும் உடையவனாய் ஒரு பொருளைத்
தெளிவாக விளக்கும் ஆற்றலுடைய புலவன் கமகன் எனப்படுவான்.
வாதி
காரணமும் மேற்கோளும் எடுத்துக்காட்டித் தன் கருத்தை நிறுவிப்
பிறர்கருத்தை மறுத்து நீக்கும் ஆற்றல் உடைய புலவன் வாதி
எனப்படுவான்.
வாக்கி
அறம் பொருள் இன்பம் வீடு என்ற நாற்பொருளையும் முறை பிறழாமல்
அருளான் மக்கட்கு உபதேசம் செய்யும் ஆற்றலுடைய புலவன்
வாக்கியாவான்.
கவி - வகை
ஒருவன் பாடிவைத்த பாட்டைத் தான் தன் பாடல்போலக் கொண்டு
கூறுபவன் சோரகவி ஆவான். ஒருவன்பாடிய
|