பக்கம் எண் :

280                      இலக

280 

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


 

கில்லாது விரித்திருப்பர், அவன் மலைமேல் வழிபோம் கூத்தப் பெண்டிர்
என்று புகழ்தலுற்றான், பெண்சாதிகள் ஊறுபட்டு அழுகை நிகழ்ந்த இடத்து
மயிர் விரித்திருப்பர். அவ்வகை மங்கலமில்லாத மயிர் விரியை அவன்
நாட்டோடும் புகழ்ந்தமையால் இதுவும் பொருளானந்தம்.
 

     ‘பெயலொடு வைகிய வியன்கண் இரும்புனத்து

     அகலிரு விசும்பின் ஆஅல் போல

     வாலிதின் விரிந்த புன்கொடி முசுண்டை.’

- மலைபடு. 99 - 101

 

என்பது, நாடு புகழ்தலுற்றான், மற்றும் மங்கலம் உளவாக வைத்து வானத்துள்
துறுமித் தோன்றும் கார்த்திகை மீனோடு கடைப்பட்டார் தின்னும் அடகாகிய
முசுண்டையின் பூவை ஒப்பித்தமையான் இஃது உவமக் காட்சியில் ஊனம்
தோன்றிய ஆனந்த உவமை.

 

‘திண்டேர் வயவரைச்சேவை வென்றானன்ன தேங்கவுண்மா

வண்போ தமன்ற வழைநிழல் நீக்கிய, வார்சிலம்ப

நண்போ நிலையிற்பொல் லாதது; நிற்கஎன் நன்னுதலாள்

கண்போற் குவளை கொணர்ந்ததற் கியாதுங்கைம் மாறிலமே.’

 

     இதனுள் தலைமகனோடு உவமிக்கப்படும் யானையைத் துறந்தான் என
ஊறுபடச் சொன்னமையின் இதுவும் உவமக் காட்சியில் ஊனம் தோன்றிய
ஆனந்த உவமை.

 

     (பாட்டுடைத் தலைவன் வயவரைச் சேவை வென்றான். அவளை
 ஒத்தது தேங்கவுள்மா. அந்த யானையைக் கிளவித் தலைவனாகிய சிலம்பன்
 நீக்கினான் என்று கூறியமை காண்க.)

 

     ‘வள்ளெயிற்றுப் பேழ்வாய் ஞமலிக்கு மான்குழாம்

     எள்ளி இரிந்தாற்போல் எவ்வழியும் - வள்ளற்கு

     மாலார் கடலன்ன மண்பரந்த வாட்டானை

     மேலாரும் மேலார் விரைந்து.’