பக்கம் எண் :

பாட்டியல் - நூற்பா எண் 127

281


                              

இதனுள் புலியினோடு உவமிக்கப்படுகின்ற தலைமகனாகிய வீரனோடு நாயை
உவமித்தமையால் இறப்ப இழிந்த ஆனந்த உவமை. (வள்ளலை நாயாகவும்
பகைவரை மானாகவும் ஒப்பிட்டமை காண்க.)
 

     ‘இந்திரனே போலும் இளஞ்சாத்தன்; சாத்தற்கு

     மந்தரமே போன்றிலங்கும் மல்லாகம்; - மந்தரத்துத்

     தாழருவி போன்றுளது தார்மாலை; அம்மாலை

     ஏழுலகும் நாறும் இனிது.’

 

இதனுள் கீழ்மகனாகிய சாத்தனைக் குலமன்னரை உவமிக்கற் பாலனவற்றோடு
அவனுக்குப் பரிக்கலாகாமை உவமித்தலின், இறப்ப உயர்ந்த ஆனந்த
உவமை.
    
     ‘சென்றுபடு பருதியின் சிவந்த தோற்றத்தை’
இதனுள் படுஞாயிற்றுக்கு உவமையாகக் காட்டலின் இறந்து பாட்டுவமை

ஆனந்தம்.

 

     ‘தீயின் அன்ன ஒண்செய் காந்தள்

     தூவல் கலித்த புதுமுகை ஊன்செத்து

     அறியாது எடுத்த புன்புறச் சேவல்

     ஊஉன் அன்மையின் உண்ணாது உகுத்தென,

     நெருப்பின் அன்ன பல்லிதழ் தாஅய்

     வெறிக்களம் கடுக்கும் வியலறை தோறும்.’

                                           - மலைபடு. 145-50

 

இதனுள் தீப்போலாம் உருவம் தோன்றும் செங்காந்தட் பூவினை ஊன்
எனக்கருதி அறியாது எடுத்த பருந்து, காலான் இடுக்கி, வாயில்குத்தி, ஊன்
அன்மையின் கைவிட்டது என்று காந்தட் பூவினது சிறப்பினைக் குணன் ஏறச்
சொல்லுவான், அவாவிச் சென்றது கொண்டு அவாவியதன்மையான் விட்டது
என்று பரிசிற்கவி அவாவிய கவியை அவாக் கெடக் கூறினமையின் இது
பரிசில் பொருளானந்தம்.

 

     யாப்பானந்தமாவது - முன்தொடுக்கப்பட்ட சிறப்புடை மொழியின்
பின்னர்ப் பாட்டுடைத் தலைவன் பெயர் நிறீஇ, அதன்