282
|
இலக்கண
விளக்கம் - பொருளதிகாரம் |
பின்னே
சிறப்புடை மொழி நிறீஇச் சிறப்பிக்கப்படுவதனை
இவ்வாறு
இடர்ப்படப் பாடுவது. என்னை?
‘முதல் தொடை........................அறியல் வேண்டும்.’
என்றாராகலின்.
வரலாறு:
‘ஊகத்தி னான்மல்கு சோலை உளியன் உயர்வரைவாய்
மேகத்தி னாலுமின் னாலும் மிகவும் மெலிந்துரைத்த
ஆகத்தி னேற்கரு ளாயென் பணியும் ஐவாயெயிற்றின்
நாகத்தி னால்மால் கடைந்திடப் பட்ட நளிகடலே.’
எனக்
கொள்க.
(முன்தொடுக்கப்பட்ட
சிறப்புடைப்பொருள் - ஊகத்தினான் மல்கு சோலை
உயர்வரை வாய் மேகமும் மின்னும்.
பாட்டுடைத் தலைவன் பெயர் - உளியன்.
சிறப்புடைமொழி - ஐவாய் எயிற்றின் நாகத்தினால்
கடைந்திடப்பட்ட
என்பது. அடைகளை இருபாலும்புணர்த்துஇடர்ப்படுதலின்
யாப்பானந்தமாயிற்று என்பது)
தூக்கானந்தமாவது - கஞ்சத்தாளம் முதலாகிய
கருவிகளோடும்
இசைந்த இசைக்கீழ்ப் பாடுதற்கண்,
அவன் பெயரைச் சார்த்தி உயரவும்இறுகவும் பெயர்
பிளந்து பண்ணியும் ஒருவர்க்குப் பெயர்
புலனாகாமையும்
சொல்லுதல். என்னை?
‘தாழா மரபினர் யாழொடு புணர்ந்த
பாவகை ஒருவனைப் பாடுங் காலை
தொல்வகை மரபின் அவன்பெயர் தோற்றி
ஏங்கினும் இடுங்கினும் எழுந்துபிரிந்து இசைப்பினும்
தூங்கினும் குழறினும் தூக்கா னந்தம்.’
என்றாராகலின்.
அவற்றிற்கு இலக்கியம் வந்தவழிக் கண்டு கொள்க.
தொடையானந்தமாவது - அளபெடைத் தொடைப் பாட்டினுள்
பாட்டுடைத் தலைவன் பெயர் சார்த்தி அளபெடுப்பத்
தொடுப்பது.
என்னை?
|