பக்கம் எண் :

284                                  இலக
284 

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


  

    எவ்வமொடு புணர்ந்து நனிமிக புலம்பப்

    பாடப் படுவோன் பதியொடும் நாட்டொடும்

    உள்ளுறுத் திறினே, உயர்கழி ஆனந்தப்

    பையுள் என்று பழித்தனர் புலவர்’

 

என்று எடுத்தோதினார் அகத்தியனார். அவற்றுக்கு இலக்கியம் வந்துழிக்
கண்டு கொள்க. (இவ்வானந்தப் பையுள் புறத்திணையியலில்
கூறப்பட்டுள்ளஆனந்தப் பையுளின் வேறாயது என்பது அறிக)
 
     இனி, மாபுராணமுடையார் விகாரமாத்திரையாகிய உயிர்
அளபெடையும், கால்மாத்திரையாகிய (மகரக் குறுக்கம்) ஒற்றும்
பாட்டுடைத்தலைமகன் பெயருக்கும் அவன் பெயருக்கு அடையாகிய
சொற்கண்ணும் புணர்ப்பின் குற்றம் என்றார். என்னை? 
 

     ‘கழிநெடில் அசையும் கால்எழுத் தசையும்

     பெயர்அயல் புணர்ப்பினும் பெயரிடைப் புணர்ப்பினும்

     வழுஎன மொழியும் மாபு ராணமே’

 

என்ப ஆகலின்.

 

     அவர் உதாரணம்:

 

     ‘மன்னும் வழுதி வருமருங்கு நின்றாளென்(று)

     இன்னும் உரைக்கும்இவ் வூர்.’

 

என்பதனுள் விகார மாத்திரையாகிய கால் மாத்திரையாய் (வகாரம் மிசையும்
மகாரம் குறுகும்) மகர ஒற்று பெயர் அருகு (மன்னும் வழுதி) வரலின் வழு.
 

     ‘வாஅம் புரவி வழுதிக்கிவ் வூர்’

 

என்பதனுள் விகார மாத்திரையாகிய உயிரளபெடையை வழுதி என்னும்
பெயர்க்கு அடையாகிய புரவிக்குப் புணர்த்தலின் வழு.

 

     இனி, இசையானந்தம் ஒன்று. அஃதாவது அவலமுற்று இருந்தோருக்கு
இசையாகிய பஞ்சமமும், குறிஞ்சியும்