பாட்டியல்
- நூற்பா எண் 127
|
285 |
பியந்தையும்,
பாலையாழும், காந்தார பஞ்சமமும், இவற்றொடு பியந்தை
யாழும், தலைவனைப் புகழ்ந்த பாடாண்பாட்டிற்கும்
இசையாகி
வரப்புணர்ப்பது இசையானந்தம் எனப்படும்.
என்னை?
‘சிறைஅழி துயரொடு சிந்தையிற் பிரிந்த
கவலை கூர்ந்த கருணைக்குப் பெயரே
அவலம் என்ப அறிந்திசி னோரே.’
‘அவலம் என்பதற்கு இசைஎனப் படுவது
குறிஞ்சி புறநிலை பியந்தை என்றா
பரந்த விகற்பிற் பாலை யாழே
கருதிய விகற்பின் காந்தார பஞ்சமம்
இசையா னந்தம் என்மனார் புலவர்’
என்றாராகலின்.
பாட்டுடைத் தலைவனையே கிளவிப்படக் கிளவித்
தலைவனாகக்
கூறுவதூஉம் ஆனந்தம் எனக் கொள்க. என்னை?
‘உருவி ஆகிய ஒருபெருங் கிழவனை
அருவி கூறுதல் ஆனந் தம்மே.’
என்றார்
ஆகலின்.
‘நூற்குற்றம் கூறுகின்ற பத்து வகைக் குற்றத்தே
‘தன்னான் ஒரு
பொருள் கருதிக்கூறல்’ என்னும் குற்றத்தைப்
பின்னுள்ளோர் ஆனந்தக்
குற்றம் என்பதொரு குற்றமென்று
நூற் செய்ததன்றி அகத்தியனாரும்
தொல்காப்பியனாரும்
இக்குற்றம் கூறாமையின் சான்றோர் செய்யுட்கு
இக்குற்றம்
உண்டாயினும் கொள்ளார் என மறுக்க. மலைபடுகடாம்
பாடிய
கௌசிகனார் ஆனந்தக் குற்றம் என்னும் குற்றம்
அறியாமல் செய்தாரேல்,
அவர் நல்லிசைப்
புலவராகார். அவர் செய்த செய்யுளை நல்லிசைப்
புலவர்
செய்த ஏனைச் செய்யுட்களுடன் சங்கத்தார்
கோவாமல் நீக்குவர். அங்ஙனம்
நீக்காது கோத்தமைக்குக்
காரணம் ஆனந்தக் குற்றம் என்பது ஒரு குற்றம்
இச்செய்யுட்குக் கூறாமையான்
|