பக்கம் எண் :

286
286   

 இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


 

என்று உணர்க’ என்று உச்சிமேற் புலவர் கொள் நச்சினார்க்கினியர்
மலைபடுகடாம் 145ஆம் அடி உரைக்கண் சொற்றமை காண்க.

 

     ‘கார்முற்றி இணரூழ்த்த கமழ்தோட்ட மலர்வேய்ந்து

     சீர்முற்றிப் புலவர்வாய்ச் சிறப்பெய்தி இருநிலம்

     தார்முற்றி யதுபோலத் தகைபூத்த வையைதன்

     நீர்முற்றி மதில்பொரூஉம் பகையல்லால் நேராதார்

     போர்முற்றொன் றறியாத புரிசைசூழ் புனலூர.’ 

- கலி. 67

 

என்பதன் உரையில் ‘புனலூர’ என்றது பாண்டியனை ஆதலின் பாட்டுடைத
தலைவனே கிளவித் தலைவனாகக் கூறிய அகப்புறம் ஆயிற்று என்று
அவரே விளக்கவுரை வரைந்ததும் நோக்குக.

 

     ஆனந்தக் குற்றங்கள் யாவும் பிற்காலச் செய்யுட்கே கொள்ளப்படுவன
என்பதும் உணர்க.

 

     ‘இறப்ப உயர இறப்ப இழிய இசைக்கும் செய்யுள்

     திறத்தன யாவையும் தீதென்று உரைப்பர்.’        

  - நவ. 101

     ‘யாப்பினுள் எழுத்துச் சொற்பொருள் யாப்பணிக்

     குற்றமும் ஐவகை குறிக்கும்ஆ னந்தமும்

     வாராது உரைப்பது வழுவில ஆகும்.’   

- மு. வி. யா. ஒ. 42

     ‘எழுத்துக் குற்றம் எழுத்திலக் கணத்தில்

     வழுத்திய முறையின் மாறு பட்டு

     வருவ தாமென வழுத்தப் படுமே.’              

 ’’    43

     ஏனைக் குற்றமும் இவற்றோ ரற்றே.’                 

 ’’    44

     ‘ஆனந்தம் ஐவகை அறையுங் காலை,

     எழுத்தின்நிலை பிறழ்ந்தன எழுத்தா னந்தம்.’     

 ’’    45

     ‘சொல்லா னந்தம் சொல்நிலை பிறழ்ந்தன.’            

 ’’    46

     ‘பொருள்நிலை பிறழ்வன பொருளா னந்தம்.’      

 ’’    47

     ‘யாப்பின்நிலை பிறழ்வன யாப்பா னந்தம்.’            

 ’’    48

     ‘அணிநிலை பிறழ்ந்து வருவன அணிஆ

     னந்தம் ஆம்என நவிலப் படுமே.’              

 ’’    49