செய்தியை விரும்பி உட்கொண்டு பாராட்டி உரைப்பவன்
சாத்துக்கவியாவான் முன்னவர் பாடல் அடிகளைப் பெரும்பாலும் தான்
கொண்டு சில புனைவுகளுடன் பாடுபவன் பிள்ளைக்கவி ஆவான்.
வழக்குச்சொற்கள் மிகச் சிவணப் பாடுபவன் வெள்ளைக்கவி ஆவான்.
நல்லவை - நிறையவை
காமம் வெகுளி கடும்பற்றுள்ளம் மானம் உவகை மதம் என்ற உட்பகை
ஆறனையும் நீக்கி நற்கலைகளை ஆராய்ந்து புகழ்பெற்றவர் தங்கியிருக்கும்
அவை நல்லவை ஆகும். அடக்கம், வாய்மை, நடுவுநிலைமை, நன்மை
இவற்றை உடைய சான்றோர் கூடிப் பிறர் குற்றத்தை நீக்கிக் குணத்தை
உட்கொண்டு பாராட்டுமாறு அமைந்த அவை நிறையவை ஆகும்.
நல்லோரை
அ ஆ, இ ஈ ஐ, உ ஊ ஒள, எ ஏ, ஒ ஓ என முதற்பாடல் முதல்
எழுத்தை ஐவகை ஆக்கி 1-6, 7-12, 13-18, 19-24, 25-30 என்று
வரையறுத்த, பகல் முப்பது நாழிகைக்குள் ஒவ்வொன்றற்கும் முதல்
மும்மூன்று நாழிகைக்குள் அகலக்கவி அரங்கேற்றத்தைத் தொடங்குக.
ஆறுநாழி ஓர் ஓரையாம். முதல் மும்மூன்று நாழியே நல்லோரையாம்.
அகலக்கவி செய்வோன்
அகலக்கவி செய்யும் புலவர் ஆசிரியருக்கு ஓதிய நற்குண
நற்செய்கைகள் அமையப்பெற்றவராய் நாற்கவியும் முத்தமிழும் வல்லவராய்
இருபதுமுதல் எழுபது வயதுக்கு உட்பட்டவராய் இருத்தல் வேண்டும்.
அகலக்கவி கொள்வோன் திறம்
அகலக்கவியைக் கொள்ளும் வள்ளல் அச்செய்யுளை, நல்லவை
நிறையவை கூடிய மன்றத்தில் அழகிய விளக்கு ஏற்றி வைத்து ஏனைய
மங்கலங்களும் பொலிய, மறையோர் ஆசி கூற,
|