பக்கம் எண் :

290
290

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


 

    ‘ஆக்கியோன் பேர்வழி யேயெல்லை யாப்பந்நூற்

     போக்கிடஞ்சொல் வோர்நுதலிற் றாயபயன் - தாக்கியஇவ்

     எட்டினொடும் காலம் களங்கா ரணமியம்பப்

     பட்டானும் அப்பெயரே பன்னு.’  

 - வெண். பாட். பொ. 20

    ‘பன்னிய நூற்பேர் பகர்ந்தோன்பேர் காரணமும்

     துன்னும் பயனளவும் சொல்லினும் - முன்னைச்

     சிறப்பாம் அவற்றுள் சிலஏறி னாலும்

     பெறப்படுமா முன்னைப் பெயர்.’  

 - வெண். பாட். பொ. 21

    ‘ஈவார் இயல்பவை ஈகைமுறைமை இவை உணர்தல்

     ஆவார் திறம்அவை கோள்ஆய ஆதியி னாம்பகுதி

     தாவா துரைத்தல் பொதுப் பாயிரம்; தனி வானவரை

     ஓவாதிறைஞ்சி அதிகாரம் முன்னர் உரைப்பர்களே.’ 

 - நவ. 67

    ‘செய்தான் செயப்பட்டது செய்பொருளது செய்திறத்தோடு

     எய்தும் பயனே இதன்வழி எல்லை என ஒரெட்டும்

     ஐயமில் காலம்அவை காரண மாகப் பத்தொடொன்றும்

     மெய்தெரியின் சிறப்புப் பாயிரம் என்ன வேண்டுவரே.’

                                              

  - நவ. 68

‘நூற்பெயர் நூல்செய்த ஆசிரியன்பெயர் நூல்விளக்கித்

தோற்றிடச் செய்தற்குக் காரணம்யாப்புத் தொன்னூலின்வழி

பாற்படும் எல்லை அறிதல் பயன் இவையும் சிறப்பின்

மேற்படு பாயிரம் என்றாசிரியர்கள் வேண்டுவரே.’       

 - நவ. 69

                                                     129

 

நூல் இலக்கணம்

 

890. நூல்எனப் படுவது நுவலுங் காலை

    முதலும் முடிவும் மாறுகோள் இன்றித்

    தொகையினும் வகையினும் பொருண்மை காட்டி

    உள்நின்று அகன்ற உரையொடு பொருந்தி