பக்கம் எண் :

பாட்டியல் - நூற்பா எண் 130 

      291


 

    ஈரைங் குற்றமும் இன்றி நேரிதின்

    எண்ணான்கு உத்தி அண்ணுதல் உடைத்தாய்

    ஒருபொருள் நுதலிய சூத்திரத் தானும்

    இனமொழி கிளந்த ஓத்தி னானும்

    பொதுமொழி கிளந்த படலத் தானும்

    மூன்றுஉறுப்பு அடக்கிய பிண்டத் தானும்

    தோன்றும் என்னச் சொல்லினர் புலவர்.

 

நிறுத்த முறையானே நூலின் இலக்கணம் கூறுவான் புகுந்தவற்றுள் இஃது
அதன் பொது இலக்கணம் கூறுகின்றது.

 

     இ - ள்: நூல் என்று சிறப்பித்துச் சொல்லப்படுவதனைக் கூறும்
இடத்து, முதல்தொடங்கி முடிவு அளவும் மாறுகோள் உறக்கிடத்தல் இன்றித்
தொகையானும் வகையானும் பொருள் தன்மையை விளக்கித் தன்கண்
நின்றும் அகன்ற உரைக் கூறுபாடுகளோடு பொருந்திப் பத்து வகைக்
குற்றமும் இலதாய், நேர்மையான முப்பத்திரண்டு தந்திர வுத்தியோடும்அணுகுதல் உடைத்தாய், ஒருபொருள் குறித்துவரும்
சூத்திரத்தானும், இனப் பொருளை உணர்த்தும் இயலானும், பலபொருட்கும்

பொதுவாகிய இலக்கணங்களைக் கூறும் படலத்தானும் படலமும் ஓத்தும்
சூத்திரமும் ஆகிய மூன்று உறுப்பினையும் அடக்கிய பிண்டத்தானும்
விளங்கித் தோன்றும் என்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு. 
 

(130)

விளக்கம்

     நூல் என்பது தமிழ் மக்கள் இலக்கணத்திற்கு இட்ட பெயராம்.
அவருக்கு நூல் அகத்தியம், அவருக்கு நூல் அகத்தியமும் தொல்காப்பியமும்
என்பது இறையனார் களவியல்