பக்கம் எண் :

298
298

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


 

நுண்ணிய பொருளோடு புணர்ந்ததனான் உபகாரம் உடைத்தாகிப் பிறரால்
பெயர்க்கப்படாத நிலைமைத்தாய், அளவுபடாத அரும் பொருளினை
உடைத்தாதல், சூத்திரத்திற்கு வனப்பாம் என்று வகுத்துக் கூறுவர் புலவர்
என்றவாறு.
 

     சூத்திரத்திற்கு முன் உரை எடுத்து யாப்பினும்என மாறிக் கூட்டுக.
யாப்பினும் புணர்ப்பினும் என்பன அழகு என்பதனோடு புணர்க்கப்பட்டுச்
செய்யுட்டாகி அடக்கி ஆகி எய்தி என்பன ஆதல் என்பதனோடு முடிந்தன.
உடம்பட என்பது எல்லாரும் உடன்படச் செய்தல் என்க. ஈண்டுக் கூறிய
செய்யுள் என்பது செய்தல் தொழில்மேல் நின்றது, தொழிற்பெயராய் என்க.
   

(133) 

விளக்கம்

 

     சூத்திரத்திற்குப் பாயிரமாகக் கூற வேண்டிய செய்திகளைச்
சூத்திரமாகச் செய்தல், சூத்திரத்தின் காண்டிகை உரையைச் சூத்திரமாகச்
செய்தல், சூத்திரத்தின் கருத்துப்பொருளை எடுத்துக் கூறுதல், போலியான்
எய்திய உரையை நீக்கி உண்மை உரையைக் கூறல் என உரை நிலை நான்கு
வகையாகக் கூறப்படுகிறது.
 

     சொற்குற்றம் பொருட்குற்றம் இன்றி அமைதல், சுருங்கச் சொல்லல் என்ற
  அழகோடு அமைதல், முறை பிறழாமல் செய்திகள் அமைதல், நுட்பமான
  கருத்துக்களைக் கொண்டு அமைந்து பல நூற்பாக்களுக்கும் உதவுதல், தன்
  இன்றியமையாமையால் தான் நீக்கப்படாத சிறப்புடன் இலங்குதல், சுருங்கச்
  சொல்லினும் பரந்தபொருளை அடக்கியிருத்தல் ஆகியவை நூற்பாவின்
  சிறப்பாம் என்பது.