பக்கம் எண் :

பாட்டியல் -முன்னுரை

3


 

தொன்னூல் விளக்கம்

   

    18ஆம் நூற்றாண்டினராகிய வீரமாமுனிவர் இயற்றிய யாப்பதிகாரத்துப்
பாட்டியல் பற்றிய பகுதியிலும், சதுர அகராதியிலும் 96 வகைப் பிரபந்தங்களவிளக்கிக் கூறப்பட்டுள்ளன.

   

7. பிரபந்த தீபிகை

   

   வேம்பத்தூர்ச் சங்க வித்துவான்களில் ஒருவராகிய பெரிய
 புதல்வர் பாப்புவையர் என்ற முத்துவேங்கட சுப்பையர் என்பார் சென்ற
 நூற்றாண்டில் ஆசிரிய விருத்த யாப்பில் இயற்றிய பிரபந்த தீபிகை என்ற
 பாட்டியல் நூல் 26 விருத்தங்களில் அமைந்துள்ளது.
   

8. முத்துவீரியப் பாட்டியல்

   

   சென்ற நூற்றாண்டில் இயற்றப்பட்ட முத்துவீரியம் என்ற ஐந்திலக்கண
 நூலின் யாப்பதிகாரத்தின் ஒழிபியற் பகுதியில் தொன்னூல் விளக்கத்தில்
 உரைநடையாக வரையப்பட்ட பிரபந்த இலக்கணங்கள் யாவும் நூற்பா
 வடிவில் அமைக்கப்பட்டுள்ளன.

   

   இப்பாட்டியல் நூல்களின் பலவற்றில் காணப்படும் மங்கலம், சொல்,
பால், வருணம், உண்டி, தானம், அக்கரம், நாள், கதி, கணம் என்ற பத்துப்
பொருத்தங்களையும், ‘தன்னான் ஒருபொருள் கருதிக் கூறல்’ என்ற
சிதைவிலக்கணத்துக்குப் பேராசிரியர் எடுத்துக்காட்டாகத் தந்துள்ளார்.
நச்சினார்க்கினியருக்கும் இப்பாட்டியல் மரபு உடன்பாடன்று. எனினும்
உலக வழக்கில் பல நூற்றாண்டுகளாகப் பிரபந்தங்களின் இலக்கணங்கள்
பெரும்பாலும் பாட்டியல் நூல்கள் வாயிலாகவே வெளியிடப்
பட்டுள்ளமையின் அவற்றை நல்லன என்று கொண்டு அறிய முற்படுவதே
நம்மனோர்க்கு ஏற்றதாகும். இனி இலக்கண விளக்கப் பாட்டியல்
நோக்குவோம்.