|
308
|
இலக்கண
விளக்கம் - பொருளதிகாரம் |
1.
நுதலியது அறிதல் :
சூத்திரத் தொடரை வெளிப்படையாக நோக்கின்
பயன் இல்லதுபோலத்
தோன்றினும், அதற்கு ஏற்ற
வகையால் கருதி உணரப்படும் பொருள்
இன்னது என்று
கொள்ளவைத்தல்.
2. அதிகாரமுறைமை :
முன்நின்ற நூற்பாவின் பொருள் பின்வரும்
நூற்பாக்களுள்
ஒன்றனுக்கோ, பலவற்றிற்கோ தேவைப்பட்ட
அளவு தொடர்பு
கொள்ளவைத்தல்.
3. தொகுத்துச் சுட்டல் :
பின்னர் விரிக்கப்பட வேண்டியனவற்றை முதற்கண்
தொகுத்துக் கூறல்.
4. வகுத்துமெய் நிறுத்தல் :
தொகுத்துக்கூறிய செய்தியைப் பின்னர்
விளக்கம் வேண்டிப்
பகுத்துக்கூறல்.
5. மொழிந்த பொருளோடு ஒன்ற அவ்வயின்
மொழியாததனை
முட்டின்று முடித்தல்:
சொல்லப்பட்ட செய்திகளை மனங்கொண்டு
சொல்லப்படாத அவற்றின்
இனமாகியவற்றின் செய்திகளையும்
கொள்ளவைத்தல்.
6. வாராததனான் வந்தது முடித்தல்:
ஒரு
நூற்பாவில் ஒரு பொருண்மைக்கு வேண்டும் இலக்கணம்
முழுதும்
கூறப்படவில்லையாயினும் கூறப்படாததனையும் அந் நூற்பாவில்
அடக்கிக்கொள்ளுதல்.
7. வந்தது கொண்டு வாராதது உணர்த்தல்:
பின் ஒரு நூற்பாவில் கூறப்பட்ட செய்தியைக்கொண்டு,
முன்
கூறப்படாத செய்தி ஒன்றினை உட்கொள்ளுவித்தல்.
|