|
பாட்டியல்
- நூற்பா எண் 138 |
309 |
8. முந்து மொழிந்ததன் தலைதடுமாற்று:
முன் ஒருகால் பின்பற்றிய முறையைவிடுத்து, வேறு
ஒரு கால்
தலைதடுமாற்றமாக முறை மாற்றிக்கூறி அதனால்
சில கருத்துக்கள்
பெறப்படவைத்தல்.
9. ஒப்பக் கூறல்:
ஒரு சொல்லுக்குக் கூறும்விதி இரட்டுற மொழிதலான்
இருசொல்லுக்கும்
அமையுமாறு கூறுதலும், ஒன்றன் இலக்கணத்தைப்
பிறிதொன்றனோடு
மாட்டெறிதலும் போல்வன.
10.
ஒருதலை அன்மை:
ஓர்
அதிகாரத்தில் கூறவேண்டிய இலக்கணத்தை வேறோர்
அதிகாரத்தில் கூறி, அக்கூறப்பட்டதனையே கூறப்பெறாத அதிகாரத்திற்கும்
கொள்ள வைத்தல்.
11.
தன்கோட் கூறல்:
சொல்லப்படாத செய்திகள் பல உளவாயினும்
ஒருநூற்கண் ஆசிரியன்
தான் கூறக் கருதியவற்றையே
கூறல்.
12.
முறை பிறழாமை:
காரணம் பற்றியோ பற்றாமலோ முதற்கண்
சில பொருள்களை
ஒருமுறையாகக் கூறியபின், எக்காரணம்
கொண்டும் அம்முறையை
மாற்றாமலேயே பின்னர் எடுத்து விதத்தல்.
13.
பிறன் உடம்பட்டது தான்உடம்படுதல்:
இயற்கையாக மனங்கொள்ளத்தக்க வாய்ப்பு
இன்று ஆயினும்,
தொன்றுதொட்டு வந்த வழக்கு நெறியான்
இது கொள்ளத்தக்க பொருள்
என்று கூறி விடுத்தல்.
14. இறந்தது காத்தல்:
முன் நூற்பாவில் கூறிய பொருள்களுள் ஒன்றனைப்
பின் வேறொரு
நூற்பாவான் நீக்குதல்.
|