பக்கம் எண் :

ப
பாட்டியல் - நூற்பா எண் 138

311


 

22. பல்பொருட்கு ஏற்பின் நல்லது கோடல்:

 

    ஒரு நூற்பாவின் அமைப்பு பல பொருள்களும் கொள்ளுதற்கு ஏற்ற
சொற்றொடரைப் பெற்றிருப்பினும், தெளிவு கருதி அதனை ஒரே பொருள்
தருவதாக மாற்றி அமைக்காது, பயில்வோர் அந்நூற்பாவின் பல
பொருள்களில் நல்ல பொருளையே கொண்டு பயனுறுவர் என்று விடுத்தல்.
 

23. தொகுத்த மொழியான் வகுத்தனர் கோடல்:

 

    தான் ஒரு வாய்பாடே நூற்பா வாயிலாக எடுத்தோதி அவ்வாய்பாடே
பற்றாகப் பல வாய்பாடுகளும் அதற்கு வந்து பொருந்துதற்கு வாய்ப்புக்
கொள்ள வைத்தல்.
   

24. மறுதலை சிதைத்துத் தன்துணிபு உரைத்தல்:

 

    ஒரு செய்தியை ஆசிரியன் கருத்துக்கு மாறாகக் கூறுவான் பிறன்
உளனாயின், அக்கருத்திற்கே இடன் ஏற்படாதவகையில், அதனை மறுத்து
நீக்கி, ஆசிரியன் தான்கொண்ட கருத்தினை வலியுறுத்தி வெளியிடுதல்.
 
25. பிறன்கோட் கூறல்:
 

    தான் இயற்றியுள்ள நூலினும் ஒத்த இடங்களில் பிறன் கருத்தையும்
வெளியிட்டு, அப்பிறன்நூல் இலக்கணத்தையும் கற்போன் உணருமாறு
செய்தல்.

 

26. அறியாது உடன்படல்:

 

    ஆசிரியன் முற்ற உணர்ந்த அறிவன் அன்மையில் தான் வரையும்
இலக்கணத்திலும் வேறுபட வருவனவும் உளவாகும் என்பதனைத் தெளிவாக
மனங்கொண்டு, அவற்றையும் நூல் பயில்வோர் நுனித்துக்கொண்டு
உணருமாறு புறனடை முதலிய நூற்பாக்களை இயற்றுதல்.
 

27. பொருள் இடையிடுதல்:

 

    தான் கூறிவருகின்ற பொருளுக்கு இடையே வேற்றுப்பொருள் ஒன்றனை
இயைபுபற்றி இணைத்துக் கூறுதலும், சொல்லும்