|
பாட்டியல்
- நூற்பா எண் 138 |
313 |
சொல்லாதன - உரையிற்கோடல், ஒன்றினமுடித்தல்,
தன்னினம்
முடித்தல், தான் எடுத்து மொழிதல், இன்னது
அல்ல இது எனமொழிதல்,
ஏதுவின் முடித்தல் முதலாயின.
இவற்றிற்கு எடுத்துக்காட்டுக்கள் இலக்கண நூல்களில்
வந்துழிக்காண்க.
தொல்காப்பிய உரையாளர்களும்
மாறனலங்கார உரையாசிரியரும்
எடுத்துக்காட்டுக்களும்
தந்துள்ளனர். ஆண்டும் காண்க.
ஒத்த
நூற்பாக்கள்
‘ஒத்த காட்சியின்........................கூறிய நூலே - முழுதும்.’
- தொ. பொ. 665
‘நுதலிப் புகுதல் ஓத்துமுறை வைப்பே
தொகுத்துச் சுட்டல் வகுத்துக் காட்டல்
முடித்துக் காட்டல் முடிவிடம் கூறல்
தான்எடுத்து மொழிதல் பிறன்கோள் கூறல்
சொற்பொருள் விரித்தல் தொடர்சொல் புணர்த்தல்
இரட்டுற மொழிதல் ஏதுவின் முடித்தல்
ஒப்பின் முடித்தல் மாட்டெறிந்து ஒழுகல்
இறந்தது விலக்கல் எதிரது போற்றல்
முன்மொழிந்து கோடல் பின்னது நிறுத்தல்
விகற்பத்தின் முடித்தல் முடிந்தவை முடித்தல்
உரைத்தும் என்றல் உரைத்தாம் என்றல்
ஒருதலை துணிவே எடுத்துக் காட்டல்
எடுத்த மொழியின் எய்த வைத்தல்
இன்னது அல்லது இதுஎன மொழிதல்
எஞ்சிய சொல்லின் எய்தக் கூறல்
பிறநூல் முடிந்தது தானுடன் படுதல்
தன்குறி வழக்கம் மிகஎடுத்து உரைத்தல்
சொல்லின் முடிவின் அப்பொருள் முடித்தல்
ஒன்றினம் முடித்தல் தன்னினம் முடித்தல்
உய்த்துணர வைப்புஎன உத்தி எண் ணான்கே.’
- நன். 13
|