330
|
இலக்கண
விளக்கம் - பொருளதிகாரம் |
ஓதியபாடமே
இந்நூற்குப் பாடமாகக் கொண்டு கூறினார். இவ்வாறு
வருவனவற்றிற்கு எல்லாம் இஃது ஒக்கும்.
மொழியான் அன்றி மனத்தான் உணரும் நுண்ணிய
பொருளாகலின்
நுண்மை என்றார். தான்சிறிதாய்ப்
பாலில் பிரை ஒத்துக் கலந்து நிற்கும்தன்மையின்
சுருக்கம் என்றார். சொல்லால் பொருள் விளங்குமாறு
இன்றிப் பொருள் ஆற்றலால் பலரும் உடன்படத் தோன்றுதலின்
ஒளியுடைமை என்றார். இயல்பால் பொருள்தன்மை உணராநிற்போருக்கு
மெலிதாதல் தன்மையின் மென்மை என்றார். இச்சூத்திரத்திற்கு
இவ்வாறுபொருள் கூறாக்கால் குன்றக் கூறல் என்னும்
குற்றம் தங்கி முதல்
நூலின் வழித்து அன்று என்பதாம்;
அதனான் இவ்வாறு பொருள் கூறல்
வேண்டும் என்க.
(145)
விளக்கம்
‘ஏது நுதலிய முதுமொழி’ என்பது காரணங்களால்
அறுதியிடப்படும்
அளவைநூற்கருத்துக்களைக் கொண்ட
முதுமொழிச் செய்யுள் எனப் பொருள்
கொள்ளப்பட்டது.
பிரதிக்கினை - கருதுதல்
|
- |
இம்மலையில்
நெருப்பு |
|
|
உண்டு என்பது. |
திட்டாந்தம் - உவமம்
|
- |
அடுக்களை
போல என்பது. |
உபநயம் - காரணம்
காட்டி |
|
|
விளக்கல்
|
- |
எங்குப் புகை உண்டோ |
|
|
அங்கு நெருப்பு உண்டு |
|
|
என்பது. |
நிகமனம் - முடிவு
|
- |
இம்மலையில் புகை இருப்ப |
|
|
தால். இங்கு நெருப்பு |
|
|
உண்மை ஒருதலை என்று |
|
|
முடிவு செய்வது. |
|