பாட்டியல்
- நூற்பா எண் 145
|
331 |
தொல்காப்பியனாரும் அகத்தியனாரும் ஏதுப்பொருண்மை
கூறி,
அதர்ப்படயாத்தல் என்பதனால் நியாயநூற் செய்திகளைத்
தமிழ் மரபிற்குத்
தேவையான இடத்தில் அமைத்துக் கூறியுள்ளனர் ஆதலின், ஏதுபற்றி
உரைப்படும்
அளவைநூற் செய்தியும் வழக்கும் செய்யுளும் அடிப்படையாக
எழுந்த எந்நூற்கும் தேவை ஆதலின் இவ்வாசிரியரும்
அதனைக் குறிப்பிட்டு
ஏதுவின் விளக்கத்துக்குத் தேவைப்படும்
அளவைநூற் செய்தியும்
சுட்டப்பட்டமை தெரித்து,
நூலுக்குக் குறை அறுத்தார்.
இதனைவிடுத்து வேறுபொருள் கூறின், நூலுள் ஏதுவின்
விளக்கத்திற்கு
உணரப்பட வேண்டும் அளவைநூற் செய்தி
சுட்டப்படாத குன்றக்கூறல் என்ற
குற்றம் நூற்குத்
தங்கும் என்பது.
இனி இந்நூற்பாவிற்குப் பேராசிரியர்,
‘கூரிதாய் சுருங்கி விழுமிதாய் எளிதாகி இயற்றப்பட்டுக்
குறித்த
பொருளை முடித்தற்கு வருமாயின், அங்ஙனம் வந்ததனைப்?
பொருள்முடித்தற்குக் காரணமாகிய பொருளினைக்
கருதுவது முதுமொழி
என்ப புலவர் என்றவாறு.
‘உழுத உழுத்தஞ்செய் ஊர்க்கன்று மேயக்
கழுதை செவியரிந் தற்றால் - வழுதியைக்
கண்டன கண்கள் இருப்பப் பெரும்பணைத்தோள்
கொண்டன மன்னோ பசப்பு.’
(பழமொழி)
என்றவழி
மற்று வழுதியைக் கண்ட கண் இருப்பத் தோள் பசந்தன
என்றக்கால் ஒன்றன் வினைப்பயன் ஒன்று நுகர்ந்தது
என்புழிக் குறித்த
பொருள் இயைபின்மை கூறுதலாயிற்று. அதனைச் சொற்றொடர் இனிது
விளக்கிற்றன்றாயினும்
முற்கூறிய முதுமொழி முடித்தது என்பது. என்னை?
அதன்கண்ணே
அது முடித்தற்கு ஏதுவாகிய இயைபின்மை கிடந்தமையின்
என்பது. இது பருப்பொருட்டன்றி நுண்ணிதாகிச்
சொற் சுருக்கம்
உடைத்தாய் விழுமிதாகி எளிதில்
பொருள் தோன்றியவாறு
|